சச்சின் தான் பெரிய வீரர் என்று நினைத்தால் ; இந்திய அணியில் இவர் இருக்கிறார் ; முன்னாள் வீரர் புகழாரம் ;

0

இந்திய :

இந்திய கிரிக்கெட் அணி கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதில் சச்சின் டெண்டுல்கர் இந்தியா கிரிக்கெட் அணியில் விளையாடி பல சாதனைகளை செய்துள்ளார். ஆமாம், சச்சின் மட்டும் தான் இதுவரை கிரிக்கெட் போட்டிகளில் 100 முறை சதம் அடித்துள்ளார்.

சச்சின்-க்கு பிறகு யாரும் இதுவரை அந்த சாதனையை முறியடிக்கவில்லை. இருப்பினும் சச்சின் சாதனையை விராட்கோலி முறியடிப்பார் என்று பாளை கூறியுள்ள. அதேபோல விராட்கோலி சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தார். இதுவரை விராட்கோலி 70 சதம் அடித்துள்ளார்.

ஆனால் விராட்கோலி இறுதியாக 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தான் சதம் அடித்துள்ளார். அதன்பிறகு ஒருமுறை கூட சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார் விராட்கோலி. உண்மையை சொல்ல போனால், ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு ரன்களை அடிக்காமல் ஆட்டத்தை இழந்து வருகிறார் விராட்கோலி.

இதனை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான Dareen Gough கூறுகையில் ; “இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய விதம் பார்க்க அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர் அப்பொழுது சிறப்பாக யோசனை செய்வது வழக்கம்.”

“ஆனால் அவருக்கு பிறகு இந்திய அணியில் விராட்கோலி இருக்கிறார் என்பது எனக்கு புரிந்தது. விராட்கோலி-யும் சிறந்த வீரர் தான் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடுவது வழக்கமாக கொண்டுள்ளார். ஷாட்ஸ் அடிப்பதிலும், ஸ்பின் பந்தை எதிர்கொள்வதிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்.”

“அதனால் விராட்கோலி இனிவரும் போட்டிகளில் ஒரு முறை சதம் அடிக்க வேண்டும். எப்படி இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 60, 70 மற்றும் 80 ரன்களை அடித்து வருகிறாரோ, அதேபோல ஒரு போட்டியில் விராட்கோலி சதம் அடித்தால் நிச்சயமாக அவரை தடுக்கவே முடியாது.”

“அது தான் ஜோ ரூட் செய்தார். அதனால் அதனை முதலில் தொடங்க வேண்டும், பின்னர் அடுத்த 3 – 4 ஆண்டுகளில் அவரது ஆட்டத்தை தடுக்கவே முடியாது என்று கூறியுள்ளார் Dareen Gough.” இவர் சொன்னது போல இந்திய அணியில் விராட்கோலி தான் அடுத்த 100 சதம் அடித்து சாதனை செய்ய போகிறார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர்.

இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை அடிப்பாரா ? விராட்கோலி ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here