ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது. இந்தமுறை இந்திய அணிதான் உலகக்கோப்பை வெல்லும் என்று நினைத்து கொண்டு இருந்தால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ ??
ஏனென்றால் இதுவரை இந்திய அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை பெற்றுள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். ஆனால் இருந்தாலும் இன்னும் சிறிது வாய்ப்புகள் இருக்கிறது ஆனால் அது நடக்குமா ?/ என்பது யாருக்கும் தெரியாது…!
இதற்கிடையே, தென்னாபிரிக்கா அணியின் சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அளித்த பேட்டியில் , இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரை பற்றி பேசியுள்ளார். அதில் யுஸ்வேந்திர சஹால் ஒரு திறமையான வீரர். எனக்கு தனிப்பட்ட முறையில் அவர் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவதை நான் பார்க்க வேண்டும்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவர் அணியில் இடம்பெறாதது எனக்கு வேதனையாக தான் இருக்கிறது. சுழல் பந்து வீச்சாளர்கள் வீசும் பந்தை அவ்வளவு எளிதாக அடிக்க முடியாது..! இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு இடையேயான போட்டியில் அதுதான் நடந்துள்ளது.
அதில் ஐஸ் சோதி 17 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினார். அதுவும் முக்கியமான விக்கெட் (விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா). ஆனால் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவத்தி சொல்லும் அளவுக்கு பவுலிங் செய்யவில்லை என்பது தான் உண்மை…!
நீண்ட நாட்களாக நான் லெக் ஸ்பின்னர் ஆக இருக்கிறேன். எனக்கு நன்கு தெறியும், போட்டியை எப்படி மாற்ற வேண்டும் என்று. உதாரணத்துக்கு 160 டார்கெட் ரன்களை அடிக்க வேண்டும். ஆனால் எதிர் அணி வேறறகள் 96 ரன்களை அடித்துவிட்டனர். அந்த நேரத்தில் நானும் என்னுடைய அணி வீரர்களும் விக்கெட் எடுத்து வெற்றியை கைப்பற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார் இம்ரான் தாஹிர்.
இந்திய அணியின் யுஸ்வேந்திர சஹால் இல்லாதது மிகப்பெரிய வருத்தத்தை தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஏற்படுத்தியது. ஆனால் யுஸ்வேந்திர சஹால் விட ராகுல் சஹார் தான் இந்திய அணிக்கு முக்கியம் என்று சொன்ன இந்திய அணியின் தேர்வாளர்கள் இப்பொழுது எங்கே போனார்கள் ??
ஏனென்றால் இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் ராகுல் சஹார் இடம்பெறவில்லை. இதற்கு யுஸ்வேந்திர சஹால் இருந்திருந்தால் சிறப்பான பவுலிங்கை இருந்திருக்க கூடும்..!! இந்திய கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க.. இந்திய அணிக்கு யுஸ்வேந்திர சஹால் முக்கியமா இல்லையா என்று மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!