தோனி இல்லை ; எனக்கு இவரை போல கிரிக்கெட் போட்டியில் வளர வேண்டும் ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் ;

கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட்டை அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அந்த வெற்றியுடன் இப்பொழுது டி-20 போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆமாம், இதுவரை நடந்த மூன்று போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் இந்திய அணி வென்றால் டி-20 போட்டிக்கான தொடரையும் வென்றுவிடும்.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022:

இந்த ஆண்டு இறுதியில் (அக்டோபர், நவம்பர்) மாதத்தில் ஐசிசி உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற போகும் வீரர்களுக்கு தான் தொடரில் வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அரை இறுதிக்கு கூட தகுதி பெறாத நிலையில் வெளியேறியுள்ளனர். அதனால் இந்த ஆண்டு நிச்சியமாக கோப்பையை வெல்ல வேண்டுமென்று இந்திய அணியை பலமாக உருவாக்கி வருகிறது பிசிசிஐ.

முக்கியமான ஆல் – ரவுண்டர் ;

கடந்த ஆண்டு சரியாக விளையாடாத ஹர்டிக் பாண்டிய சில மாதங்களுக்கு பிறகு சூப்பரான கம்பேக் கொடுத்துள்ளார் என்பது தான் உண்மை. அதுவும் ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக களமிறங்கிய ஹர்டிக் பாண்டிய அதிரடியாக பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்தினார்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் 2022ல் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தான் கோப்பையை வென்றுள்ளனர். அதில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார் ஹர்டிக். அதனால் நிச்சியமாக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஹர்டிக் பாண்டிய சமீபத்தில் அளித்த பேட்டியில் : ” நான் ஹர்டிக் பாண்டியவாக தான் இருக்கிறேன். நான் இப்பொழுது விளையாடி கொண்டு இருக்கும் நிலை மற்ற வீரர்களுக்கு இல்லையென்றால், நான் தான் இந்தியா அணியின் ஆல் – ரவுண்டர். எப்பொழுது பெரிதாக ஒரு செயலை ஆரம்பிக்கும் முன்பு அதில் நிச்சியமாக கனவு இருக்கும்.”

“அதேபோல தான் எனக்கும், நானும் தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஜேக் காலிஸ் போல இருக்க ஆசைப்படுறேன். அவர் தென்னாபிரிக்கா அணிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ததை அனைவருக்கு தெரியும். அதேபோல தான் நானும் இந்திய அணிக்காக செய்ய ஆசைப்படுறேன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here