HomeTrending Newsவெற்றி பெற்றாலும் இதில் எனக்கு கொஞ்சம் வேதனையாக தான் இருக்கிறது ; ஷிகர் தவான் பேட்டி

வெற்றி பெற்றாலும் இதில் எனக்கு கொஞ்சம் வேதனையாக தான் இருக்கிறது ; ஷிகர் தவான் பேட்டி

நேற்று இரவு 7 மணியளவில் நடந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இந்த போட்டி போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது…!

அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் மற்றும் சுமன் கில் ஆகிய இருவரும் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்தனர். முதல் 100 ரன்களை அடித்த நிலையில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் விளையாடி வந்தனர்.

இறுதி வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 308 ரன்களை அடித்தனர். அதில் ஷிகர் தவான் 97, சுமன் கில் 64, ஸ்ரேயாஸ் ஐயர் 54, சூர்யகுமார் யாதவ் 13, சஞ்சு சாம்சன் 12, தீபக் ஹூடா 27, அக்சர் பட்டேல் 21, ஷர்டுல் தாகூர் 7 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 309 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. தொடக்க வீரரான ஷாய் ஹோப் 7 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின்னர் பேட்டிங் செய்த வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இறுதி ஓவர் வரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 6 விக்கெட்டை இழந்த நிலையில் 305 ரன்களை அடித்தனர். அதில் மாயேர்ஸ் 75, சமர் ப்ரூக்ஸ் 46, பிராண்டன் கிங் 54, நிக்கோலஸ் பூரான் 25, ரோவ்மன் பவல் 6, ஹோஸின் 32, ரோமரியோ ஷெப்பர்ட் 39 ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது இந்திய கிரிக்கெட் அணி. அதனால 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய இந்தியா அணியின் கேப்டனான ஷிகர் தவான் கூறுகையில் ; ” எனக்கு போட்டியின் வென்றதில் சந்தோசம் தான்.”

“ஆனால் நான் சதம் அடிக்காதது மிகவும் வருத்தமாக உள்ளது. இருந்தாலும் பரவாயில்லை, அணியின் பங்களிப்பு தான் வெற்றிக்கு முக்கியமான காரணம். இறுதியில் கொஞ்சம் பயம் இருந்தது, ஆனால் போட்டி அப்படியே தலைகீழாக மாறியது தான் உண்மை. எப்பொழுதும் ஒரு போட்டி எப்படி செல்கிறதோ, அதற்கு ஏற்ப விளையாடுவது தான் முக்கியமான ஒன்று.” என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img