இவர் அணியில் விளையாட மிகவும் கடினமாக உழைத்தார் ; அதன்படி சிறப்பாக விளையாடியுள்ளார் ; ஹர்டிக் பாண்டிய

0

போட்டி 18 : நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கின்ஸ்க் அணியும் மோதின. இந்த போட்டி மொஹாலி-ல் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான தவான் மற்றும் ப்ரபிசிம்ரான் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. இருப்பினும் ராஜபக்ச, மாத்தியூ ஷார்ட், சாம் கரன் போன்ற வீரர்கள் ரன்களை அடித்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 153 ரன்களை அடித்தனர்/ அதில் தவான் 8, மாத்தியூ ஷார்ட் 36, ராஜபக்ச 20, ஜிடேஷ் சர்மா 25, சாம் கரன் 22, ஷாருகான் 22 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

அதில் தொடக்க வீரரான சுப்மன் கில் மற்றும் சஹா பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை குவித்தனர். இருப்பினும் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 154 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

புள்ளிபட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 6வது இடத்திலும் இருக்கின்றனர். போட்டி முடிந்த பிறகு பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய, வெற்றியை பற்றி கூறியுள்ளார்.

அதில் “உண்மையிலும் இது போன்ற போட்டிக்கு நான் ஆதரவாக இருக்கவே மாட்டேன். அதுமட்டுமின்றி, இந்த போட்டியில் நாங்கள் (குஜராத் வீரர்கள்) பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம். பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக பவுலிங் செய்தனர். ஆனால் குஜராத் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால் வெற்றியை கைப்பற்ற முடிந்தது.”

“மிடில் ஓவர்களில் ரிஸ்க் எடுத்து தான் ஷார்ட்ஸ் விளையாட வேண்டியுள்ளது. அதிலும் மோஹித் மற்றும் ஆசாரி பவுலிங் செய்தது ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால், பொறுமையாகவும் கடுமையாகவும் உழைத்தார் மோஹித், அதன் விளைவாகத்தான் போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார் என்று ஹர்டிக் பாண்டிய கூறியுள்ளார்.”

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய மோஹித் சர்மா 4 ஓவர் பவுலிங் செய்து 18 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 2 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here