ரஞ்சி கோப்பையில் நான் தான் அதிக விக்கெட்டை எடுத்துள்ளேன் ; ஆனால் எனக்கு இந்திய அணியில் கிடைக்கவில்லை ; இளம் வீரரின் உருக்கமான பேட்டி.!

வருகின்ற ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளாகும். அதில் நான் இடம்பெறவில்லை அதனால் மிகவும் வருத்தமாக இருக்கிறது..!

இடது கை பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட், சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் வருகின்ற இங்கிலாந்து மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இல்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ரஞ்சி கோப்பை போட்டியில் 2019 -2020 சீசன்களில் 10 போட்டிகளில் 67 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ஜெயதேவ் உனட்கட். அதுமட்டுமின்றி, கேப்டனாக வழிநடத்தி சவுராஷ்டிரா அணியை வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், டிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; நான் இந்திய அணியின் டெஸ்ட் அணியில் இல்லாதது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது என்று உருக்கமான பதிவை செய்துள்ளார் ஜெயதேவ் உனட்கட். இந்திய அணியின் வீரர்களை தேர்ந்தெடுக்கும் போது நான் இருப்பேன் என்று நினைத்தேன். அதுமட்டுமின்றி, நான் என்னுடைய முழுத்திறமையும் காமித்துவிட்டேன். நான் அணியில் இருப்பேன் என்ற செய்தி வரும் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் நான் அணியில் தேர்வாகவில்லை. அது எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது. நான் என்னுடைய வேலையை சரியாக தான் செய்து வருகிறேன். ஆனால் அதனை சமாளிக்க என்னை நானே சமாதானம் செய்து கொண்டு இருக்கிறேன். அதுமட்டுமின்றி, அதிக விக்கெட்டை ரஞ்சி கோப்பை போட்டியில் எடுத்துள்ளேன்.

ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லை. அதுமட்டுமின்றி, சில வீரர்களுக்கு காயம் காரணமாக இந்திய அணியில் வெளியேறினார்கள். ஆனால் அப்பொழுது கூட எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு நாட்டில் நடந்து, அதில் நான் சரியாக விளையாடவில்லை என்ற காரணத்தால் என்னுடைய இந்திய அணிக்கான வாய்ப்பு கிடைக்கவில்லையா.

கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முக்கியமான சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் என்னுடைய ஐபிஎல் 2020 போட்டிகளின் ஆட்டம் சரியாக இல்லை என்பதால் என்னை இந்திய அணியில் இடம்கிடைவில்லை. இப்பொழுது, இந்திய அணியை தேர்வு செய்ய டி-20 போட்டிகளை வைத்துதான் முடிவு செய்து வருகின்றனர்.

அஸ்ட்ராலிவுக்கு எதிரான போட்டிகளில் முக்கியமான வீரர்களுக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால் சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினார்கள். அதில் நான் இடம்பெற்று இருக்கலாம் என்றும், அதற்கான முழு தகுதியும் இருக்கிறது என்று நான் நினைத்தேன்.

அதுமட்டுமின்றி, இப்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உண்மையான சொல்ல போனால், எனக்கு மேல் இருக்கும் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகின்றனர். அதனால் நான் என்னுடைய வாய்ப்புக்காக காத்திருப்பேன் என்று கூறியுள்ளார் ஜெயதேவ் உனட்கட்.