கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே அணிதான் இந்திய கிரிக்கெட் அணி. ஆனால் சமீப காலமாக இந்திய அணிக்கு சரியான போட்டிகள் அமையவதில்லை. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்த முடிந்த உலகக்கோப்பை டி20 2021 போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
அதிலும் குறிப்பாக அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது இந்திய அணி. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிசிசிஐ தலைவரான கங்குலி கூறுகையில் ; உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கடந்த 2017ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு ஆகிய உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையடியுள்ளது இந்திய அணி.
ஆனால் இந்த முறை இந்திய அணி விளையாடிய விதம் மிகவும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் கங்குலி. ஆமாம்… ! இந்திய அணி இறுதியாக தோனி தலைமையிலான இந்திய அணி 2013ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றுள்ளது. அதன்பிறகு இன்னும் இந்திய அணி மிகவும் கடினப்பட்டு வருகிறது.
மற்ற நாடுகளுக்கு இடையே பல போட்டிகளில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. ஆனால் தோனிக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இன்னும் ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தினறிக்கொண்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டி முடிந்த பிறகு விராட்கோலி டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், யாரும் எதிர்பாராத விதமாக திடிரென்று பிசிசிஐ எடுத்து அதிரடி முடிவால் விராட்கோலியை ஒருநாள் போட்டிக்கான கேப்டனாகவும் வெளியேற்றியுள்ளது. அதனால் இனிமேல் ரோஹித் சர்மா தான் ஒருநாள் மற்றும் டி20போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
வருகின்ற 26ஆம் தேதி முதல் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதில் ரோஹித் ஷர்மாவுக்கு பயிற்சியின் போது கையில் பலமாக அடிப்பட்டுவிட்டது. அதனால் அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி அவருக்கு பதிலாக பிரியனக் பஞ்சால் இடம்பெற்றுள்ளார். ஆனால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.