நான் கூடிய விரைவில் திரும்பி வருவேன்…!! இந்தியா வீரர் , டெல்லி கேப்பிட்டல் கேப்டனின் ட்விட்டர் பதிவு…!

இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 டி-20 போட்டிகள் முடிந்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் அதிக போட்டிகளில் வென்று கோப்பையும் கைப்பற்றியுள்ளனர் இந்திய அணி. இப்பொழுது மூன்று ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Photo Credit : BCCI

நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 317 ரன்களை எடுத்து இந்திய அணி. அதில் தவான் 98 ரன்கள், ரோஹித் சர்மா 28 ரணங்கள், விராட் கோலி 56 ரன்கள் ,ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள் , கே.எல்.ராகுல் 62* ரன்கள், ஹார்டிக் பாண்டிய 1 ரன்கள் மற்றும் குர்னல் பாண்டிய 58* ரன்கள் எடுத்துள்ளனர்.

அதிலும் குர்னல் பாண்டிய மற்றும் கே.எல்.ராகுலின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. இருவரும் ஆட்டம் இழக்காமல் 50 ஓவர் முடியும் வரை அதிரடியாக விளையாடி இந்தியா அணிக்கு நல்ல ரன்களை சேர்த்துள்ளார். 318 எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் 46 ரன்கள் மற்றும் பரிஸ்டோவ் 94 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இந்த இருவரும் இணைந்து இங்கிலாந்து அணிக்கு 140 ரன்களை எடுத்துக்கொடுத்துள்ளனர். இவர்களது விக்கெட்டுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு நல்ல ஒரு பார்ட்னெர்ஷிப் அமையவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் அதன்பின்னர் பேட்டிங் செய்த பென் ஸ்டோக்ஸ் 1 ரன்கள், மோர்கன் 22 ரன்கள், ஜோஸ் பட்லர் 2 ரன்கள், மெயின் அலி 30 ரன்கள், சாம் குரான் 12 ரன்கள் எடுத்துள்ளார்.

Read More : இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? இல்லையா ?….. முழு விவரம்…!

42.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 251 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அதனால் இந்தியா அணி 66 ரன்கள் விதியசத்தில் இங்கிலாந்து அணியை வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்தியா. இனிவரும் இரு ஒருநாள் போட்டிகளில் ஒரு பொடியை வென்றால் கூட கோப்பையை இந்தியா அணி கைப்பற்றுவது உறுதி.

நான் கூடிய விரைவில் திரும்பி வருவேன்…!! இந்தியா வீரர் , டெல்லி கேப்பிட்டல் கேப்டனின் ட்விட்டர் பதிவு…!

இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது 7.4 ஒவேரில் இந்திய அணியின் பௌலர் தாக்குர் பந்தை இங்கிலாந்து அணியின் வீரர் பரிஸ்டோவுக்கு வீசினார். அப்பொழுது அதனை தடுக்க முயன்ற போது ஸ்ரேயாஸ் ஐயரின் தோள்பட்டையில் அடிபட்டுவிட்டது.

Photo Credit : BCCI

அதனால் அவருக்கு பதிலாக வேறொரு வீரர் பீல்டிங் செய்தார். அதன்பின்னர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்கேன் செய்தபோது அவரது தோள்பட்டையில் பலமாக அடிபட்டுவிட்டதால் அவருக்கு ஆபரேஷன் செய்யும் நிலைமை கூட வரலாம் என்று கூறியுள்ளனர். அப்படி ஒருவேளை ஆபரேஷன் செய்தால், குறைந்தது 2 மாதம் ஆவது ஓய்வு தேவைப்படும் எண்டது கூறியுள்ளனர்.

அதனால் மீதமுள்ள இரு ஒருநாள் போட்டியில் இருந்தும் மற்றும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார் ஸ்ரேயாஸ் ஐயர். இதனால் அவரது அவருக்கு ஆதரவாக பல கருத்துக்களை மற்றும் வாழ்த்துக்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதனை பார்த்த ஸ்ரேயாஸ் ஐயர் ; உங்கள் அனைவரின் பதிவையும் நான் பார்த்தேன். எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. இந்த மாதிரியான பின்னடைவு, என்னை தைரியமாக மீண்டும் கொண்டுவரும். அதனால் நிச்சியமாக நான் மீண்டும் கூடிய விரைவில் வருவேன் என்று கூறியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பாவித்து செய்துள்ளார்.