இன்று மதியம் 3 மணி அளவில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
இதற்கிடையில், கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தால் அவருக்கு பதிலாக பும்ரா தான் இந்த முறை கேப்டனாக அணியை வழிநடத்தி செல்ல போகிறார். அதனால் இந்திய அணி எப்படி விளையாட போகிறது என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் உத்தேச விவரம் :
மயங்க் அகர்வால், சுமன் கில், புஜாரா, விராட்கோலி, ரிஷாப் பண்ட், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், ஷர்டுல் தாகூர், முகமது ஷமி.
இங்கிலாந்து அணியின் உத்தேச விவரம் :
அலெஸ் லீஸ், சாக் ஸ்ரவ்லே, ஓலி பாப், ஜோ ரூட், பரிஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், போட்ஸ், ஸ்டூரட் போர்ட், ஜாக் லீச் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளரை சந்தித்த பும்ராவிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி, விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் சிறப்பாக அணியை வழிநடத்தியுள்ளனர்.”
“அவர்கள் எல்லாரும் இந்திய அணிக்காக பல அர்பணிப்புகளை செய்துள்ளனர். நான் முடிந்த வரை அவர்கள் செய்த விஷயங்களை நானும் கற்றுக்கொண்டு, அதேயே செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் இறுதியாக நான் என்ன நினைகின்றேனோ, அதனை தான் செய்வேன்..!”
” ஒரு போட்டியில் எப்படி வேணாலும் சூழ்நிலை மாறலாம். அதனால் நான் அதற்கு ஏற்ப நடந்துகொள்ள போகிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் பும்ரா.”
பல போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பும்ரா, டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக இருப்பது சரியாக இருக்குமா ? அவரால் (பும்ரா) அணியை சிறப்பாக வழிநடத்த முடியுமா ? இல்லையா ? கிரிக்கெட் ரசிகர்களே, உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!