ஐபிஎல் 2021, 12வது போட்டியில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதினர்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி இறுதிவரை அனைவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல ரன்களை குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்த நிலையில் 188 ரன்களை எடுத்தனர்.
பின்பு 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் ஒரு அளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன்பின்னர் பேட்டிங் செய்த வீரர்கள் யாரும் சரியாக ரன்களை எடுக்கவில்லை என்பது உண்மை. அதனால் இறுதிவரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்ததால், 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே .
கடந்த ஆண்டு போல் இல்லாமல் அதற்கு எதிர்மாறாக வெற்றிகளை கைப்பற்றி கொண்டே இருக்கிறது சிஎஸ்கே அணி. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இப்பொழுது புள்ளிபட்டியலில் 4 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் அளித்த பேட்டியில் ; நீங்க ஏன் முதல் சில பந்துகள் அடிக்க முடியாமல் அதனை வீண்செய்தீர்கள் என்ற கேள்விக்கு, ஆமாம் நான் முதல் 6 பந்துகள் எந்த ரன்களையும் அடிக்கவில்லை. அதனை சரியாக பயன்படுத்தி இருந்தால் நிச்சியமாக 200+ ரன்களை அடித்திருக்க முடியும்.
இது முக்கியமான போட்டியாக இருந்திருந்தால் நிச்சியமாக தோல்விக்கு நான் காரணமாக கூட இருந்திருப்பேன். அதனால் இனிவரும் போட்டியில் நான் அந்த தவறை சரி செய்வேன் என்று கூறியுள்ளார் சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி. தோனியின் வெளிப்படையான பேச்சால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். தான் செய்த தவறை அவரே ஒப்புக்கொண்டு அதனை வெளிப்படையாக கூறியுள்ளார் தோனி.