ரோஹித் சர்மா இல்லை; ஹார்டிக் இல்லை; India -வில் மீதமுள்ள IPL போட்டிகள் நடைபெற்றால் , India -வில் விளையாட நான் தயாராக இருக்கிறேன் : மும்பை இந்தியன்ஸ் வீரர் பேட்டி…!

ரோஹித் சர்மா இல்லை; ஹார்டிக் இல்லை; India -வில் மீதமுள்ள IPL போட்டிகள் நடைபெற்றால் , India -வில் விளையாட நான் தயாராக இருக்கிறேன் : மும்பை இந்தியன்ஸ் வீரர் பேட்டி

ஐபிஎல் 2021 போட்டி;

கடந்த ஏப்ரல் 9 ஆம் முதல் மே 30 ஆம் தேதி வரை ஐபிஎல் 2021 டி-20 கான லீக் போட்டிகள் நடைபெறும் என்று முன்பே பிசிசிஐ கூறியுள்ளது. அதன்படி சிறப்பான முறையில் ஆரம்பித்த ஐபிஎல் 2021, 29போட்டிக்கு பின்பு சில வீரர்களுக்கு உடல்நிலை குறைவால் போட்டியை ரத்து செய்தனர்.

ஏன் ஐபிஎல் 2021 போட்டியை ரத்து செய்தனர்;

மே 4 ஆம் தேதி அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியம் மொத இருந்தனர். ஆனால் எதிர்ப்பாராத விதமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரருக்கு உடல் நிலை சரியாக இல்லை. அதனால் கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.

அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பவுலர் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு பிசிசிஐ அறிவுறுத்திய படி அனைத்து அணிகளுள் இருக்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3பேருக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2 பேருக்கும், சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியின் ஒருவருக்கும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஒருவருக்கும் கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் உடனடியாக ஐபிஎல் 2021யில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் போட்டியை தற்காலிகமாக ரத்து செய்து, வீரர்கள் அனைவரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர் பிசிசிஐ.

மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகள் எப்போ நடைபெறும் ?

மீதமுள்ள ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. ஆனால் அது எந்த நாட்டில் என்று இன்னும் முடிவு செய்ய முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது பிசிசிஐ. ஒருவேளை செப்டம்பர் மாதத்தில் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறைந்து விட்டதால் இந்தியாவில் கூட மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெற அதிகம் வாய்ப்புள்ளது.

மீதமுள்ள ஐபிஎல் போட்டியை நான் இந்தியாவில் விளையாட தயார்…!

நியூஸிலாந்து அணியின் ஆல் -ரவுண்டர் ஆன ஜிம்மி நீஷம் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவேளை இந்தியாவில் மக்கள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பித்துவிட்டால், நான் மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் 2021யின் மீதமுள்ள போட்டிகளை விளையாட நான் தயார் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, எப்படி இவ்வளவு பாதுகாப்புகளை தாண்டி ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அதனால் கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளின் போது விமானத்தின் மூலம் தான் பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது.

அதுமட்டுமின்றி பொதுவான விமான நிலையத்தில் தான் நாங்களும் வர வேண்டியுள்ளதால் தோற்று ஏற்பட காரணமாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. நான் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முன்பே எனக்கு நன்கு தெரியும் இந்தியாவில் என்ன சூழல் என்று.

இருந்தாலும் நான் விளையாட வந்ததற்கு காரணம் கிரிக்கெட் தான் எனக்கு முக்கியம் என்பதால், அதுமட்டுமின்றி இங்கு ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய சில நாட்களில் ஆஸ்திரேலியா நாட்டில் விமான போக்குவரத்துக்கு ரத்து செய்தனர். அதனால் சில வீரர்கள் வேறொரு நாட்டுக்கு சென்று அங்கு இருந்து ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என்று கூறியுள்ளார் ஜிம்மி நீஷம்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 50 லட்சம் ரூபாய்க்கு அவரை வாங்கியுள்ளனர்.ஜிம்மி நீஷம், இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.