HomeTrending Newsவிராட்கோலி இடத்தில் இவர் இருந்திருந்தால் நிச்சயமாக அணியில் இருந்து வெளியேற்றி இருப்பார்கள் ; முன்னாள் வீரர்...

விராட்கோலி இடத்தில் இவர் இருந்திருந்தால் நிச்சயமாக அணியில் இருந்து வெளியேற்றி இருப்பார்கள் ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் வருகின்ற ஜூலை 22ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதற்கான அணியை சமீபத்தில் தான் வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்த காரணத்தால் அவருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியை ஷிகர் தவான் தான் இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்த உள்ளார். இதற்கிடையில், இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விராட்கோலி:

இந்திய கிரிக்கெட் அணியை டெஸ்ட் போட்டிக்கான பட்டியலில் முதல் இடத்தில் தக்கவைத்து கொள்ள அனைத்து முயற்சிகளையும் விராட்கோலி, கேப்டனாக இருந்தபோது செய்தார். விராட்கோலி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

இதுவரை விராட்கோலி ஆவது கிரிக்கெட் போட்டிகளில் ,மொத்தம் 70 சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி பல போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தோனி கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

அவரை தொடர்ந்து விராட்கோலியை டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ. அதில் இருந்து இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி உலக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது இந்திய. ஆனால் கடந்த ஓராண்டாக விராட்கோலியின் விளையாட்டு முன்பு போல இல்லை.

இதையும் படியுங்க : ஐபிஎல் போட்டிகளில் பட்டைய கிளப்பிய இளம் வீரர் தான் இனிமேல் ஒருநாள் போட்டிக்கான ஓப்பனிங் பேட்ஸ்மேன் 

அதனால் அவர் அனைத்து விதமான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதுமட்டுமின்றி விராட்கோலி 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தான் இறுதியாக சதம் அடித்துள்ளார். அதனை தொடர்ந்து ரன்களை அடிக்க முடியாமல் தவித்து வருகிறார் விராட்கோலி.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாளை மற்றும் டி-20 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தார் விராட்கோலி. அதனால் இந்த ஆண்டு இறுதியில் நடக்க போகும் டி-20 உலகக்கோப்பை போட்டியில் விராட்கோலி இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை, என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து :

விராட்கோலியின் சமீபத்திய விளையாட்டை பற்றி பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சையத் கிர்மணி அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் விராட்கோலியை பற்றி பேசிய கூறுகையில் ; ” விராட்கோலியிடம் அதிகப்படியான அனுபவம் அவரிடம் உள்ளது.”

“அதனால் நிச்சியமாக உலகக்கோப்பை டி-20 2022 போட்டிகளில் விராட்கோலி இடம்பெற வேண்டும். ஒரு போட்டியில் விராட்கோலி மட்டும் சிறப்பாக விளையாட தொடங்கினால் போதும் அவரது விளையாட்டை எப்பொழுதும் தடுக்கவே முடியாது. ஆட்டத்தை எப்படிவேண்டுமாலும் மாற்றக்கூடிய வீரராக கூட இருக்கலாம்.”

“விராட்கோலி போன்ற அனுபவம் மற்றும் திறன் வாய்ந்த வீரர் நிச்சியமாக உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட தகுதியான ஒருவர் தான். அதுமட்டுமின்றி, இப்பொழுது இருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் சிரமம் தான். இதே விராட்கோலி இடத்தில் வேறு யாராக இருந்தாலும் நிச்சியமாக அணியில் இருந்து வெளியேற்றிருப்பார்கள்.”

“ஆனால், ஒரு நிலைபெற்ற வீரருக்கு சந்தேகத்தின் பலன் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் சையத் கிர்மணி.” இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை டி-20 லீக் போட்டிகளில் விராட்கோலியின் விளையாட்டு இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக இருக்குமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img