ராகுல் டிராவிட்-க்கு பதிலாக இவரை பயிச்சியாளராக அறிவிக்கலாம் ; ரசிகர்கள் வரவேற்பு ;

0

ரவிசாஸ்திரி-க்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் நியமனம் ஆகியுள்ளார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சிலருக்கு நல்ல செய்தியாக இருந்தாலும் ஒரு சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்திய கிரிக்கெட் அணி :

கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று தொடங்கிய டெஸ்ட் போட்டிகளில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் வென்றுள்ளது.

ராகுல் டிராவிட் வெற்றிகரமான பயிற்சியாளரா ?

கடந்த ஆண்டு ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார் ராகுல் டிராவிட்.அதனால் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் காம்பே வெறித்தனமாக இருக்கும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் தோல்வி தான் கிடைத்தது.

கடந்த ஆண்டு இறுதியில் ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனால் ராகுல் டிராவிட்-க்கு பதிலாக வேறு யாராவது தலைமை பயிற்சியாளராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு விளக்கும் கொடுக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் ” இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டும் இரு கேப்டனை அறிவித்துள்ளது இந்திய. ஆமாம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக ரோஹித் சர்மாவும், டி-20 போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்டிக் பாண்டியவும் விளையாடி வருகின்றனர்.”

“அதேபோல இரு பயிற்சியாளர்கள் இருந்தால் என்ன தவறு ? சேவாக் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா பயிற்சியாளராக இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும். அதிலும் ஆஷிஷ் நெஹ்ரா கடந்த ஆண்டு அறிமுகம் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.”

“அதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் எப்படி வெல்ல வேண்டுமென்று ராகுல் டிராவிட்-க்கு தெரியும். அதேபோல, ஆஷிஷ் நெஹ்ராவிற்கு எப்படி டி-20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்று நன்கு தெரியும் என்று கூறியுள்ளார்.”

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இடம்பெற்றது சிறப்பான விஷயம் ஆ? அல்லது அவருக்கு பதிலாக யார் பயிற்சியாளராக இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here