இவரை உங்க அணியில் சும்மா இருக்குறதுக்கு…சிஎஸ்கே அணியில் இருந்த மாஸ் பண்ணிருக்கலாம் ….! சோகத்தில் ரசிகர்கள்..!

இவரை உங்க அணியில் சும்மா இருக்குறதுக்கு…சிஎஸ்கே அணியில் இருந்த மாஸ் பண்ணிருக்கலாம் ….! சோகத்தில் ரசிகர்கள்..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான முறையில் தொடங்கி உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு முதல் முதலில் தொடங்கிய ஐபிஎல் 2021 இப்பொழுது ரசிகர்களின் ஆதரவை பெற்று சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் போட்டியில் பல முக்கியமான அணைத்து அணிகளிலும் விளையாடாமல் இருக்கின்றனர். அதில் நியூஸிலாந்து அணியின் கேப்டனான கென் வில்லியம்சன், சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியை சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் 4வது பேட்டிங் ஆர்டரில் 11 போட்டிகளில் விளையாடிய வில்லியம்சன் 317 ரன்களை எடுத்துள்ளார்.

முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் தான் கென் வில்லியம்சன். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2021 முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

முதல் போட்டியில் கென் வில்லியம்சன் அணியில் ஏன் இல்லை ? அவர் நல்ல பேட்ஸ்மேன் தான் ?? அவரை ஏன் சும்மா வெச்சுருக்கீங்க?? என்ற பல கேள்விகளை சமூகவலைத்தளங்களில் எழுகிறது. ஒருவேளை அவரை ஏலத்தில் விடப்பட்டு இருந்தால், நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை எடுத்திருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

ஏனென்றால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் புதிதாக இணைந்துள்ள கிருஷ்ணப்ப கவுதம் அதிகபட்சமாக 9.25 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி அவரை வாங்கியுள்ளது. ஒருவேளை கென் வில்லியம்சன் இருந்திருந்தால் சிஎஸ்கே சூப்பர் அணி கைப்பற்றிருக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.

சுரேஷ் ரெய்னா 3வது இடத்திலும் , கென் வில்லியம்சன் 4வது இடத்திலும் பேட்டிங் செய்திருந்தால் நிச்சியமாக வேற லெவல் ஆக இருந்திருக்கும். ஆனால் சன்ரைசர்ஸ் அணி ஏன் இப்படி செய்கிறார்கள் ? என்று சமூகவலைத்தளங்களில் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.