இந்திய அணியில் இவர் சதம் அடிக்கவில்லை என்றால், இவரால் முடியாது என்று அர்த்தம் கிடையாது ; சல்மான் பட் கூறியுள்ளார்…! யார் அந்த இந்திய வீரர்..!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் பேட்ஸ்மேன் இவரால் சதம் அடிக்காததால், அவரால் முடியாது என்று அர்த்தம் கிடையாது. அவர் முன்பே பல சாதனையை முறியடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலி பல சாதனையை செய்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு விராட் கோலி அடித்த சதம் தான் இறுதியாக உள்ளது. அதன்பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இன்னும் சதம் அடிக்கவில்லை. விராட் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர், அவர் சதம் அடிக்கவில்லை என்ற காரணத்தால், அவரால் முடியாது என்று அர்த்தம் இல்லை.

கடந்த ஒரு ஆண்டுகளாக அவர் சதம் அடிக்கவில்லை. அவரால் அடிக்க முடியாது என்று அர்த்தம் கிடையாது. சரியான நேரம் அமையவில்லை என்று தான் அர்த்தம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பே விராட் கோலி பல சாதனையை அடித்துள்ளார். இதுவரை விராட்கோலி 70 சதங்களை அடித்துள்ளார்.

மூன்று போட்டிகளில் (ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட்)ஆகிய அணைத்து போட்டிகளிலும் குறைந்தபட்ச ரன்களான 90 அடித்து வருகிறார் விராட்கோலி. சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த படியாக விராட் கோலி தான் 100 சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த மாதம் ஜூன் 18ஆம் தேதி ஆண்டு இந்திய மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்க போகிறது இந்தியா அணி. விராட்கோலியின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர் பார்த்து காத்துக்கொன்று இருகின்றனர்.

சமீபத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் கூறுகையில் “எப்பொழுது விராட் கோலியை பார்த்தால் சமூகவலைத்தளங்களில் லைக் செய்து வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல, விராட் கோலி மற்றும் கென் வில்லியம்சன் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேசுவது வழக்கமாக கொண்டுள்ளார் மைக்கல் வாகன்.

ஆனால் அவரது கருத்து முற்றிலுமாக தவறாக உள்ளது. சில பேர் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். அவர்களால் நிச்சியமாக முன்னேற முடியாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் கூறியுள்ளார்.