இவரது ஆட்டம் தொடர்ந்து இப்படியே இருந்தால், நிச்சியமாக கஷ்டம் தான் ; கடுப்பான இந்திய ரசிகர்கள் ;

0

நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சுமன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டத்தை சிறப்பாக விளையாடவில்லை.

ஹனுமா விஹாரி, விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்டுல் தாகூர் ஆகிய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்த வந்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான ரன்கள் இல்லாத நிலை தான் ஏற்பட்டது. ஆனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் ரன்களை குவித்தனர்.

ஆமாம், ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா செய்த சிறப்பான பார்ட்னெர்ஷிப் தான் இந்திய ரன்களை அடிக்க காரணமாக இருந்தது. அதனால் தான் இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட்டை இழந்த நிலையில் 338 ரன்களை அடித்துள்ளது. அதில் சுமன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட்கோலி 11 ரன்களை அடித்துள்ளார்.

மேலும் அதிரடியாக விளையாடிய ரிஷாப் பண்ட் 146 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 83 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகிறார். 150 ரன்களை ஆவது இந்திய அணி அடிக்குமா ? என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் 338 ரன்களை அடித்தது ஆச்சரியமாக தான் உள்ளது.

விராட்கோலி கடந்த சில போட்டிகளில் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை என்பது தான் உண்மை. ஆமாம், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 11 ரன்களை அடித்த நிலையில் ஆட்டத்தை இழந்தார். அதுமட்டுமின்றி, அவர் இறுதியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டியில் 72,0,62,27,0,44,13,0,42 மற்றும் 20 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

இதில் இரு முறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். இதே நிலைமை தொடரினால் நிச்சியமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு தான். ஏனென்றால் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ.

அதனால் யாராக இருந்தாலும் சரியாகி விளையாடவில்லை என்றால் நிச்சியமாக இந்திய அணியில் தொடர்ந்துவிளையாடுவது மிகவும் கடினம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. விராட்கோலி இதேபோல தொடர்ந்து விளையாடினால் என்ன நடக்கும் ? அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here