இவர் இந்த மாதிரி விளையாடினால் எப்படி ஐபிஎல் அணியை வழிநடத்த முடியும் ; சேவாக் அதிரடி பேட்டி ;

0

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 போட்டிகள். பின்பு ஐபிஎல் டி-20 ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காரணத்தால் இப்பொழுது ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 14 சீசன் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 15வது சிறப்பாக தொடங்கி இதுவரை 16 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை, மும்பை அணிக்கு பிறகு டெல்லி அணி அதிக வெற்றிகளை கைப்பற்றி வருகிறது. 2020ஆம் ஆண்டு இறுதி போட்டி வரை விளையாடிய டெல்லி அணி தோல்வியை பெற்றுள்ளது. பின்பு கடந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது டெல்லி அணி.

இரு நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்……!

அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் வரை விளையாடி வெறும் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 149 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் பிருத்வி ஷாவ் 61,வார்னர் 4, ரிஷாப் பண்ட் 39, சர்பாரஸ் கான் 36 ரன்களை அடித்துள்ளனர்..!

பின்பு 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. தொடக்கத்தில் கே.எல்.ராகுல் 24 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர். இருப்பினும் டி-காக் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 155 ரன்களை அடித்தது லக்னோ அணி.

அதில் அதிகபட்சமாக டி-காக் 80 ரன்களை அடித்துள்ளார். இந்த போட்டியை பற்றி பேசிய இந்தியா அணியின் முன்னாள் வீரரான சேவாக் அளித்த பேட்டியில் ; டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷாப் பண்ட் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்………..!

அதில் ” ஒரு போட்டியில் வெற்றி பெறுவது அல்லது தோல்வி பெறுவது இயல்பு தான். ரிஷாப் பண்ட் அணுகுமுறை சரியாக தான் உள்ளது. இருப்பினும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ரிஷாப் பண்ட் 30க்கு மேற்பட்ட பந்தை எதிர்கொண்டு விளையாடியுள்ளார்.”

“அதில் குறைந்தது 60 ரன்களை ஆவது அடித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. ஒருவேளை ரிஷாப் பண்ட் இன்னும் அதிகப்படியாக 20 ரன்களை அடித்திருந்தால் நிச்சயமாக லக்னோ அணிக்கு ஆபத்தாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ரிஷாப் பண்ட் அவரது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டியது இல்லை.”

மேலும் பேசிய சேவாக் : “ரிஷாப் பண்ட் எப்பொழுதும் வெளிப்படையாக விளையாட வேண்டும். அப்பொழுதுதான் அதிக ரன்களை அடித்து அணியை வெற்றி பெற செய்தார், இது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. ஆனால் ரிஷாப் பண்ட் இப்பொழுது கேப்டனாக இருப்பதால் போட்டிகளில் பொறுப்பாக விளையாடினால் நிச்சியமாக ஐபிஎல் போட்டிகளில் வெற்றிகரமாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார் சேவாக்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here