HomeTrending Newsஇவர் தான் இந்திய அணியின் அடுத்த கபில் தேவ் ; இதை மட்டும் செய்தால் போதும்...

இவர் தான் இந்திய அணியின் அடுத்த கபில் தேவ் ; இதை மட்டும் செய்தால் போதும் ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் அட்டகாசமாக விளையாடிய இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி :

வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி முதல் நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட்டை அணியும் மோத உள்ளனர். அதில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்..!

மாஸ் கம்பேக் கொடுத்த ஆல் – ரவுண்டர் :

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டர் என்றால் அது ஹர்டிக் பாண்டிய தான். அந்த அளவிற்கு முன்னணி வீரராக திகழ்ந்த ஹர்டிக் பாண்டிய, கடந்த இரு ஆண்டுகளாக பெரிய அளவில் விளையாடவில்லை. பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பிறகு அவரால் பவுலிங் செய்ய முடியாமல் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடி வந்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு சில மாதங்கள் எந்த விதமான போட்டிகளிலும் விளையாட நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக வழிநடத்தி உள்ளார்.

ஐபிஎல் 2022யில் குஜராத் அணியை வழிநடத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருந்துள்ளார். அதனை அடுத்து இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மூன்று போட்டிகளில் 100 ரன்களை அடித்துள்ளார். பவுலின் செய்து 6 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

ஹர்டிக் பாண்டியாவின் விளையாட்டை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் கூறுகையில் ; ” ஒருநாள் போட்டிகளில் கபில் தேவ் செய்த சாதனை நிச்சியமாக ஹர்டிக் பாண்டியாவால் முறியடிக்க முடியும். அவரிடம் அந்த திறமை உள்ளது. கிரிக்கெட் விளையாடிய கபில் தேவ் ஒரு ஜாம்பவான் தான். அவருடைய இடத்திற்கு செல்வது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆனால் ஹர்டிக் பாண்டிய தொடர்ந்து இதேபோல பவுலிங் செய்தால் போதும். ஏனென்றால், இப்பொழுது பேட்டிங் செய்யும் திறன் போதுமான ஒன்று.”

“ஒருவேளை அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகள் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக கபில் தேவ் செய்த சாதனையை ஹர்டிக் பாண்டியாவால் நெருங்கி வர முடியும் என்று கூறியுள்ளார் வாசிம் ஜாபர்.” இந்த ஆண்டு நடைபெற உலகக்கோப்பை மற்றும் ஆசியா கோப்பையோ போட்டிக்கான இந்திய அணியின் முக்கியமான வீரராக ஹர்டிக் பாண்டிய இடம்பெற்றால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்குமா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img