இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பைக்கான டி-20 போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க போகும் 6 அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.


ஆமாம், இந்த முறை ஆசிய கோப்பை 2022ல் இந்திய, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் போன்ற ஆறு அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வீரர்களின் பட்டியல் :
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அவேஷ் கான், புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், ரவி பிஷானி போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் காயம் காரணமாக பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவரும் அணியில் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆமாம், இந்திய அணியின் முன்னணி பவுலர் தான் பும்ரா, அவர் இல்லாமல் யாரை வைத்து இந்திய கிரிக்கெட் அணி சமாளிக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது ?


இந்த முறை ஆசிய கோப்பைக்கான போட்டியில் ஆவேஷ் கான், புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் போன்ற மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் பும்ராவிற்கு நிகரான ஒரு வீரர் இருக்கிறாரா ? என்று கேட்டால் அது சந்தேகம் தான்.
இந்திய அணியை போலவே பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அப்ரிடி வீரரும், இலங்கை அணியில் துஷ்மந்தா சமீரா போன்ற வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.