இது மட்டும் நடந்தால் நிச்சியமாக 2500கோடி இழப்பு ஏற்படும் ; கங்குலி…! ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்…!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ஆரம்பித்தது. ஆனால் கொரோனா தாக்கத்தால் ஐபிஎல் 2021 போட்டியை பாதியில் நிறுத்தியது பிசிசிஐ. இதுவரை 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் ஒரு போட்டியை ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்தது பிசிசிஐ. அதன்விளைவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 4 பேருக்கு, சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியில் 1 பேருக்கு, டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஒருவருக்கும் ….. இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் உடனடியாக முடிவு செய்த பிசிசிஐ, ஐபிஎல் 2021 தற்காலிகமாக போட்டியை நிறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, மொத்தம் 60 போட்டியில் வெறும் 29 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. அதனால் மீதமுள்ள போட்டிகள் டி-20 உலககோப்பைக்கு பிறகு நடக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. சமீபத்தில் கங்குலி அளித்த பேட்டியில் ; ஐபிஎல் 2021, மீதமுள்ள 31 போட்டிகள் நிச்சியமாக கூடிய விரைவில் நடத்தப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஒருவேளை ஐபிஎல் முழுமையாக நடைபெறாமல் போய்விட்டாள். நிச்சியமாக குறைந்தது 2500 கோடி ரூபாய் நஷ்டம் நிச்சியமாக ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐபிஎல் 2021, மீதமுள்ள போட்டிகள் நடத்துவதில் பல பிரச்சனை இருக்கிறது. ஆனால் அதனை எப்படி நடந்த வேண்டும் என்று நாங்கள் தினமும் ஆலோசனை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார் கங்குலி.