ஐபிஎல் 2021; இங்கு நடந்தால் நிச்சியமாக மக்களுக்கு அனுமதி இருக்கும் ; சந்தோஷத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ; பீட்டர்சன் அதிரடி பேட்டி

ஐபிஎல் 2021: கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்தது. அதன்படி சிறப்பான முறையில் ஆரம்பித்தது ஐபிஎல் 2021, ஆனால் எதிர்பாராத விதமாக 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தீடிரென்று மீதமுள்ள போட்டிகளை தற்காலிமாக நிறுத்திவைத்துள்ளது பிசிசிஐ.

ஏன் ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது :

சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் சில சந்தேகத்தின் அடிப்படையில் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

அதனால் உடனடியாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 வீரருக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2 பேருக்கும்,சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தலா ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் பிசிசிஐ, மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள போட்டிகளை உடனடியாக தற்காலிகமாக ரத்து செய்தது. அதுமட்டுமின்றி அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு வழி அனுப்பிவைத்துள்ளது பிசிசிஐ.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் இங்கு நடந்தால் நிச்சியமாக ரசிகர்களுக்கும் நேரில் வந்து பார்க்க அனுமதி இருக்கும் ; கெவின் பீட்டர்சன்

பல பாதுகாப்புகளுடன் ஐபிஎல் 2021 ஆரம்பித்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் மைதானத்தில் வேலை செய்யும் சில ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் தான் வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கும் பிசிசிஐ சந்தேகத்துடன் இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் மீதமுள்ள போட்டிகளை நிச்சியமாக இந்தியாவில் நடத்த வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக மீதமுள்ள போட்டிகளை எங்கு நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

அதனை பற்றி பேசிய முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டனான கெவின் பீட்டர்சன் ; மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகள், அரபு நாட்டுக்கு பதிலாக இங்கிலாந்து நாட்டில் நடந்தால் நிச்சியமாக சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் முடிந்த பிறகு ஐபிஎல் 2021 போட்டிகள் நடந்தால் நிச்சயமாக சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, ரசிகர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். அப்பொழுது ஐபிஎல் விளையாடும் வீரர்களுக்கு நல்ல ஒரு சூழ்நிலை இருக்கும் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.