ஐபிஎல் 2021; இதுக்கு மீதமுள்ள போட்டிகள் நடக்கமையே இருக்கலாம் ; ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ; என்ன செய்ய போகிறது பிசிசிஐ : முழு விவரம் இதோ..!

ஐபிஎல் 2021 கடந்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஐபிஎல் 2021 பாதியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் பிசிசிஐ-யின் அதிரடியான முடிவால் தற்காலிகமாக ஐபிஎல் 2021 போட்டியை நிறுதிவைத்துள்ளது. அதனால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார்.

மே 4 ஆம் தேதி அன்று ஈயின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத இருந்தன. ஆனால் அதில் சில கொல்கத்தா வீரருக்கு உடல்நிறைவு காரணமாக அந்த போட்டியை மட்டும் ரத்து செய்தனர்.

பின்னர் அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது. அதில் சில வீரருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்தது. பின்னர் அனைத்து அணிகளில் இருக்கும் வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், சென்னை அணியில் 3 வீரருக்கும், கொல்கத்தா அணியில் 3 பெருக்கும், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் தலா ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மீதமுள்ள போட்டிகள் எப்பொழுது நடைபெறும்?

வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். ஆனால் நிச்சியமாக மீதமுள்ள போட்டிகள் ஐபிஎல் 2021 இந்தியாவில் நடக்க வாய்ப்பு கிடையாது என்றும் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும், சில சிக்கல் இருப்பதாக தெரிகிறது ?

மீதமுள்ள ஐபிஎல் 31 போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. ஏனென்றால் மீதமுள்ள போட்டிகள் நடைபெறலாம் இருந்தால் நிச்சியமாக 2500 கோடி ரூபாய் நஷ்டம் ஆகும் என்று எதிர்பார்க்க படுகிறது. அதுமட்டுமின்றி, இங்கிலாந்து அணி வீரர்கள் யாரும் மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்கள் என்று ஆஷ்லே கில்ஸ் கூறியுள்ளார்.

ஏனென்றால் இங்கிலாந்து அணி ஜூலை மாதத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறார்கள். அதன்பின்னர், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளை சீரியஸ் போட்டிகளில் இங்கிலாந்து அணி எதிர்கொள்ள போகிறார்கள்.

அதன்பின்னர் நவம்பர் மாதத்தில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட உள்ளது. இங்கிலாந்து வீரர்களுக்கு கொஞ்சம் ஆச்சு ஓய்வு தேவை அதனால் ஐபிஎல் போட்டிகள் ஒருவேளை நடந்தால் இங்கிலாந்து அணியின் வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ஆஷ்லே கில்ஸ். இதனால் ஐபிஎல் அணிகள் சோகத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.