ரிஷாப் பண்ட் ஆ – பதிலாக இவர் கேப்டனாக இருந்தால் நிச்சியமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி கோப்பையை வெல்லும் ; ஆகாஷ் சோப்ரா ; யார் அந்த வீரர் தெரியுமா?

ஐபிஎல் 2021: கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடிரென்று சில வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் உடனடியாக போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

எத்தனை ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தோற்று உறுதியானது ?

அனைத்து அணிகளில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 3 பேருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கும், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் தலா ஒருவருக்கு தோற்று உறுதியானது.

அதனால் உடனடியாக வீரர்கள் அனைவரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்த பிசிசிஐ, மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மீதமுள்ள போட்டிகள் எப்பொழுது நடைபெறும் ?

வருகின்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என்றும் பிசிசிஐ கூறியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் தினமும் இரு போட்டிகள் என்ற கணக்கில் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு எப்படி ஐக்கிய அரபு நாட்டில் போட்டிகள் நடந்ததோ அதேபோல தான் மீதமுள்ள ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறும் என்று தகவல்வெளியாகியுள்ளது.

டெல்லி அணியில் ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக இவர் கேப்டன் செய்தால் நிச்சியமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி கோப்பை கூட வெல்ல அதிகம் வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது ஸ்ரேயாஸ் ஐயர் கையில் பலமாக அடிபட்டுவிட்டது. அதனால் மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகினார். பின்பு ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் 2021 லீக் போட்டிகளிலும் விளையாட முடியாது என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் கூறியுள்ளனர்.

பின்பு அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில உள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

வருகின்ற செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள போட்டிகள் நடைபெற உள்ளது. ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றால் நிச்சியமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு நல்ல பலம் இருக்கும். அதுமட்டுமின்றி ஸ்மித்துக்கு பதிலாக ஐயர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.