கொல்கத்தா அணி Playoff க்கு தகுதி பெற.. மும்பை தான் உதவி செய்ய வேண்டும் ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2021 போட்டிகளில் வென்று இந்த முறை ஆவது ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறுமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ? இதுவரை இரண்டு முறை (2012, 2014) போன்ற ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

அதன்பின்னர் சரியாக டீம் அமையாத காரணத்தால் கோப்பையை வெல்ல முடியவில்லையா ? கவுதம் கம்பிருக்கு பிறகு தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியை வழிநடத்தினார். பின்னர் கொல்கத்தா அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்தால் கேப்டன் பதவியில் இருந்து விலகி ஈயின் மோர்கன் பொறுப்பேற்றார்.

இந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இப்படி தான் நடக்க வேண்டும் அதுவும் மும்பை கையில் தான் உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

அதேபோல தான் மும்பை இந்தியன்ஸ் அணியும் 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அதற்கு முக்கியமான காரணம் நெட் ரன் ரேட் தான் காரணம். மும்பை அணிக்கு -0.453 மற்றும் கொல்கத்தா அணி +0.363 என்ற விகிதத்தில் உள்ளனர்.

ஆனால் இன்னும் மூன்று போட்டிகள் கொல்கத்தா அணிக்கு மீதமுள்ளன. அதில் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றால் அதிக வாய்ப்பு உள்ளது ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற. ஒருவேளை மும்பை அணியும் மூன்று போட்டியில் வெற்றிபெற்றால் பின்னர் நெட் ரன் ரேட் வைத்துதான் முடிவுகள் எடுக்கபடும்.

அதனால் கொல்கத்தா அணியை விட, மும்பை இந்தியன்ஸ் அணி ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தால் மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது. இதுவரை 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி.

ஆனால் இந்த ஆண்டு ப்ளே – ஆஃபிபி சுற்றுக்கு தகுதி பெறுமா ? இல்லையா என்பதே தெரியாமல் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் ..!