மேக்ஸ்வெல் மட்டும் இதை செஞ்சாருன்னு…! ஆர்.சி.பி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் போகத்தை யாராலும் தடுக்க முடியாது ; சேவாக் கருத்து ….முழு விவரம் இதோ..!
நேற்று நடந்த முதல் ஐபிஎல் 2021 போட்டியில் ; ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதினார். டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 159 ரன்களை அடித்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா 19 ரன்கள், கிறிஸ் லைன் 49 ரன்கள், சூர்யா குமார் யாதவ் 31 ரன்கள், இஷான் கிஷான் 28 ரன்கள், ஹார்டிக் பாண்டிய 13 ரன்கள் எடுத்துள்ளனர்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. ஆர்.சி.பி அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி 33 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்கள், மெஸ்க்வெல் 39 ரன்கள் மற்றும் டி வில்லியர்ஸ் 48 ரன்களை எடுத்துள்ளனர். இறுதி ஓவர் இறுதி பந்து வரை போராடிய பெங்களூர் அணி வெற்றியை கைப்பற்றியது.
இப்பொழுது பெங்களூர் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. பெங்களூர் அணியின் வெற்றிக்கு அணியில் அறிமுகம் ஆன புது வீரர் மெஸ்க்வெல். இவரது அதிரடியான ஆட்டத்தால் வெற்றியை கைப்பற்றியுள்ளது.
மேக்ஸ்வெல் மட்டும் இதை செஞ்சாருன்னு…! ஆர்.சி.பி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் போகத்தை யாராலும் தடுக்க முடியாது ; சேவாக் கருத்து ….முழு விவரம் இதோ..!
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக், நேற்று நடந்த போட்டியை பற்றி கருத்து கூறியுள்ளார். மெஸ்க்வெல் அதிரடியான ஆட்டம் உண்மையாலும் ஆர்ச்சரியமாக தான் இருக்கிறது. அதுவும் புதிய அணியில் மோதல் போட்டியில் அசத்தியுள்ளார்.
அவரது 50% சதவீதம் விளையாட்டை வெளிப்படுத்தினாலும் போதும் நிச்சியமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழைவதை யாராலும் தடுக்க முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் கூறியுள்ளார். இதனால் ஆர்.சி.பி ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.