இப்படி மட்டும் சிஎஸ்கே அணி செய்தால் நிச்சியமாக ஐபிஎல் 2021கான கோப்பையை வெல்லும்… ! சந்தேகமே இல்லை.. ! முழு விவரம் இதோ…!

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் தொடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் இருக்கின்றனர். 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சிஎஸ்கே அணிக்கு மிகவும் மோசமான சீசன் ஆக இருந்தது. அதன்விளைவாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையவில்லை. அதனால் இந்த ஆண்டு நிச்சயமாக காம்பேக் தரவேண்டும் என்று சிஎஸ்கே வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

அதன்விளைவாக ஐபிஎல் 2021, ஏலத்தில் சிஎஸ்கே அணியில் புதிதாக மொயின் அலி, ஹாரி ஷங்கர் ரெட்டி, ராபின் உத்தப்ப, கிருஷ்ணாப்ப கவுதம் போன்ற வீரர்கள் இணைந்துள்ளனர். இதுவரை நடந்த ஐபிஎல் 2021னில் சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் இருக்கின்றனர்.

சிஎஸ்கே அணி இந்த ஆண்டு சிறந்த அணியாக இருக்கிறது. ஏனென்றால் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பான பந்து வீச்சால் 106 ரன்களுக்குள் பஞ்சாப் அணியை சுருட்டியது சிஎஸ்கே அணி. மீதமுள்ள முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் சிஎஸ்கே அணி 188 ரன்களை அதிரடியாக விளையடியுள்ளது. அதனால் பேட்டிங் மற்றும் பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகிய எல்லா விசயத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

சிஎஸ்கே அணியில் புதிதாக அணியில் இடம்பெற்றுள்ள மொயின் அலியின் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான ஒன்று. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் 3வதாக பேட்டிங் செய்துள்ளார். அதில் டெல்லி அணிக்கு எதிராக 36 ரன்கள், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 46 ரன்கள் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 26 ரன்களை எடுத்துள்ளார்.

ஒருவேளை மொயின் அலியை பவர் பளே – வில் பேட்டிங் செய்தால் நிச்சியமாக இன்னும் அதிரடியாக விளையாடுவார் என்று பரவலாக கருத்துகள் பேசப்பட்டு வருகிறது. இதுவரை அவர் பேட்டிங் செய்த பல போட்டிகளில் அசத்தலான முறையில் ரன்களை அடித்துள்ளார். ஒருவேளை சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக அமைந்தால் நிச்சியமாக பல போட்டிகளில் வெற்றியை மட்டுமின்றி கோப்பையை கூட வெல்ல முடியும்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here