இந்திய அணியில் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க ..! நான் என்று தெறியும் ; மனம் திறந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் என்ற மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதில் இந்திய அணியும் நியூஸிலாந்து அணியும் மோத உள்ளன. யார் போட்டியில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான படத்தை பெற முடியும். இந்திய அணி வெற்றி பெறுமா ? இல்லை தோல்வி பெறுமா? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ, இந்திய வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டது. அதில் சில வீரர்கள் இல்லாததால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்தை பகிர்ந்து வந்துள்ளனர். அதேபோல சில முக்கியமான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் பேசிய அவர் எனக்கு வாய்ப்பு மட்டும் கொடுத்து பாருங்க, நிச்சயமாக நான் என்னுடைய 100% சதவீதமான விளையாட்டை நான் வெளிப்படுத்துவேன்.

ஆஸ்திரேலியா தொடர் வெற்றிக்கு பிறகு நிச்சியமாக இந்திய அணியின் கேப்டன் விராட் பாய் நிச்சியமாக இங்கிலாந்து அணியை வெல்ல போகிறார். அதற்கு முன்னாடி நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் இறுதி போட்டி உள்ளது. நிச்சியமாக இந்திய அணி கோப்பையை வெல்லும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் நான் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தான் வாய்ப்பு எதிர்பார்க்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது அதனை எப்படி எதிர்கொள்ள போகிறேன், என்று தன நான் யோசனை செய்து வருகிறேன். ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் அதனை என்னுடைய இரு-கைகளால் அதனை பிடித்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார் அவேஷ் கான்.