மேட்ச் 4: நேற்று ஐபிஎல் 2021கான 4வது போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கே.எல. ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 221 ரன்களை எடுத்தனர். அதில் அதிபட்சமாக கே.எல்.ராகுல் 91 ரன்கள், தீபக் ஹூடா 64 ரன்கள் மற்றும் கிறிஸ் கெயில் 40 ரங்களையும் அடித்துள்ளார்.
பின்பு 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிவரை போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 119 ரன்களை எடுத்துள்ளார்.
இரு அணிகளும் சரிமாரியாக அதிரடியாகவும் ரன்களை அடித்துள்ளனர். அதிலும் கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சனின் ஆட்டம் மிகவும் அதிரடியான முறையில் இருந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதால் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் பஞ்சாப் கிங்ஸ் அணியை பற்றி கருத்தை கூறியுள்ளார் ; பஞ்சாப் அணி இப்பொழுது வலுவான அணியாக மாறி வருகிறது. அதுமட்டுமின்றி கே.எல்.ராகுல் அதனை சிறப்பான முரையில் வழிநடத்தி வருகிறார்.
கே.எல்.ராகுல் மற்றும் பஞ்சாப் அணி வீரர்கள் மட்டும் பயம் இல்லாமல் எல்ல போட்டிகளை எதிர்கொண்டால் போதும் நிச்சியமாக அவர்களுக்கு தான் இந்த ஆண்டு ஐபிஎல் 2021கான கோப்பை. பயமில்லாமல் போட்டிகளை விளையாடினால் போதும் பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார் மைக்கல் வாகன்.
பஞ்சாப் அணி கோப்பையை கைப்பற்றுமா இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றல் ஒரு போட்டியை வைத்து முடிவை சொல்லிவிட முடியாது. ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நிறைய முறை முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஆனால் இறுதி நேரத்தில் கோப்பையை கைப்பற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. அதனால் முதல் போட்டியை வைத்து எந்த அணியையும் கணிக்க முடியாது என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்தை கூறி வருகின்றனர்.