இவர் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்த பிறகு வேறு யாரு விண்ணப்பித்தாலும் பயன் இல்லை; கவாஸ்கர் பேட்டி ;

கடந்த 17ஆம் தேதி முதல் ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு அதனை கண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு இப்பொழுது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி ஓய்வு பெற போகிறார்.

அதனால் அவருக்கு பிறகு யார் பயிற்சியாளர் என்ற குழப்பம் எழுந்துள்ளது. யாரை தேர்வு செய்வது என்று தெரியாமல் பிசிசிஐ இருந்தது. யாருக்கு விருப்பம் உள்ளதோ அவர்கள் விண்ணப்பிக்காலம் என்று பிசிசிஐ ஒரு தேதியை குறிப்பிட்டு அதுதான் கடைசி தேதி அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கடைசி நேரத்தில் நம்ம இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றுமின்றி டெஸ்ட் கிங் ராகுல் டிராவிட் அதற்கு விண்ணப்பித்துள்ளார். இதனை அனைவரும் எதிர்பார்க்காத ஒன்று தான். இருந்தாலும் இதனை கேட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் : ராகுல் டிராவிட் விண்ணப்பித்துவிட்டார், இனிமேல் அவ்வளவு தான். இதற்கு மேல் யார் விண்ணப்பித்தாலும் அதில் அந்த அளவுக்கு பயன் இருக்காது. ஏனென்றால் இவர் Under 19 உலகக்கோப்பை அணியை வழிநடாத்தியுள்ளார்.

அவரால் (ராகுல் டிராவிட்) நிச்சியமாக இந்திய அணியை சிறப்பாக கொண்டு வருவார். அவருக்கு அந்த திறமை உள்ளது என்று கூறியுள்ளார் கவாஸ்கர். சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான சீரியஸ் போட்டிகளில் விளையாடியது இந்திய. அப்பொழுது இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை தான் பிசிசிஐ தேர்வு செய்தது.

ரவி சாஸ்திரிக்கு , ராகுல் டிராவிட் சிறந்த ஒரு பயிற்சியாளராக இருப்பர் என்று எதிர்பார்க்க படுகிறது. இவருக்கு பதிலாக வி.வி.எஸ் லட்சுமன் இடம்பெற்றால் நிச்சியமாக அதனை கிரிக்கெட் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஏனென்றால் இப்பொழுது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார் லட்சுமன். அதில் பல திறமையான வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதனால் இவர் (லட்சுமன்) இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தால் இந்திய அணி அவ்வளவு தான் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்கள் நீங்கள் சொல்லுங்க ?? இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அல்லது வி.வி.எஸ்.லட்சுமன் வர வேண்டுமா ?? என்று உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!!!