இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளனர்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி :
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை வென்ற ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
பின்பு, நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றிருந்தால் நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக போட்டி சம நிலையில் முடிந்தது.


அதனால் மூன்றாவது இடத்தில் இருந்த இலங்கை அணிக்கு வாய்ப்பு காத்திருந்தது. ஆனால் நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் நியூஸிலாந்து அணி வென்றதால் இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
கடந்த முறையும் இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியது. அப்பொழுது நியூஸிலாந்து அணியிடம் போட்டியிட்டு தோல்வியை பெற்றது இந்திய.
ஆனால் இந்த முறை ? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 ?


சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் போன்ற இரு விஷயங்களும் சரியாக இருக்கிறது. அதனால் மற்ற நாடுகளுக்கு இடையேயான தொடர் போட்டிகளில் வெற்றியை கைப்பற்றி வருகிறது இந்திய.
இந்த முறையாவது இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டியில் வெல்லுமா ? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் நீண்ட ஆண்டுகளாவே ஐசிசி கோப்பைகளை கைப்பற்ற முடியமால் தவித்து வருகிறது இந்திய.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெல்ல வேண்டுமென்று இந்தியா அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் சில அறிவுரையை கூறியுள்ளார். அதில் “டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்த ஐந்து நாட்கள் என்ன நடக்க போகிறது என்று தெரிந்து கொள்ள கொண்டு, அதற்கு ஏற்ப தான் அணியை தேர்வு செய்ய வேண்டும்.”


“நிச்சியமாக அணியை தேர்வு செய்யும்போது சுழல் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் கேப்டனுக்கு சவாலாக தான் இருக்கும். அப்பொழுது தான் அணியை சரியாக வழிநடத்த முடியும். நான் இதனை இந்திய அணியின் பக்கத்தில் இருந்து சொல்கிறேன். ஆஸ்திரேலியா அணி என்ன செய்ய வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்யட்டும்.”
“ஆனால், இந்த முறை இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் வாய்ப்பு கிடைத்துள்ளது உலகி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர்.”