Advertisement
HomeTrending Newsரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டால்; இந்த மூன்று வீரர்களில் ஒருவருக்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்கலாம் ;...

ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டால்; இந்த மூன்று வீரர்களில் ஒருவருக்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்கலாம் ; முன்னாள் பாகிஸ்தான் வீரர் பேட்டி ;

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் :

இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் கேப்டன் பற்றிய சர்ச்சை எழுந்தது. அதில் விராட்கோலி-க்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் ரோஹித் சர்மா. அதனால் இந்த முறை எப்படியாவது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி-20 உலககோப்பை போட்டியில் வெல்லும் என்று பலர் நினைத்து கொண்டு இருக்கின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள்:

கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்த ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணி 3- 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி டி-20 போட்டியிலும் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

ரோஹித் ஷர்மாவிற்கு ஏற்பட்ட காயம்:

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 164 ரன்களை அடித்தனர். பின்பு 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. 19 ஓவர் முடிவில் 165 ரன்களை அடித்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியது இந்திய.

இதற்கிடையில் இந்திய அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்த நேரத்தில் ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் போட்டியில் இருந்து ரிட்டையர்ட் ஆனார். ஆனால் போட்டி முடிந்து பேசிய ரோஹித் சர்மா, இன்னும் மூன்று தினங்கள் உள்ளது. அதற்குள் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் வீரரின் கருத்து :

ரோஹித் ஷர்மாவின் காயத்தை பற்றிய பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கூறுகையில் ; ” ரோஹித் சர்மா சிறப்பான ஷாட் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அது எதிர்பாராத விதமான காயம் ஏற்பட்டது. நிச்சியமாக காயம் பெரிய அளவில் ஏற்பட்டிருக்கும். இந்த போட்டியை காட்டிலும் ரோஹித் ஷர்மாவுக்கு இனிவரும் ஆசிய மற்றும் ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் மிகவும் முக்கியமான ஒன்று.”

“ஒருவேளை ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு கொடுத்தால் இந்திய அணியில் பல போட்டியின் வெற்றியாளர்கள் உள்ளனர். அதில் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் உள்ளனர். அதனால் அவருக்கு சில போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுத்துவிட்டு இதில் யாரவது ஒருவரை கேப்டனாக வழிநடத்த வைக்கலாம் என்று கூறியுள்ளார் டேனிஷ் கனேரியா.”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular