HomeTrending Newsஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி இதை செய்தால் மட்டும் தான்...

ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி இதை செய்தால் மட்டும் தான் முடியும் ; முழு விவரம் இதோ ;

ஆசிய கோப்பைக்கான டி-20 போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியுள்ளது. அதில் இருந்து இதுவரை சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகளில் இருந்து இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதன் போட்டிகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது. இப்பொழுது புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை அணியும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது இடத்தில் இந்திய அணியும், இறுதி இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் உள்ளனர்.

இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெறும். மற்ற அணிகள் அனைத்தும் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதில் இந்திய கிரிக்கெட் இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டிக்கான இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா இல்லையா ? அப்படி தகுதி பெறவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ?

இப்பொழுது இருக்கும் நிலையில் பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதனால் இந்திய அணிக்கு இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதில் அனைத்திலும் நிச்சியமாக வெற்றிபெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

நாளை இரவு இலங்கை அணியுடனும், 8ஆம் தேதி அன்று ஆப்கானிஸ்தான் அணியுடனும் விளையாட போகிறது இந்திய. அப்படி வெற்றிபெற்றால் நிச்சியமாக ஆப்கானிஸ்தான் அணி போட்டிகளில் இருந்து வெளியேறிவிடும். அடுத்து வரும் இரு போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வென்று, பாகிஸ்தான் அணியும் இலங்கை அணியை வென்றால் நிச்சியமாக இந்திய அணிக்கு இறுதி போட்டி உறுதி தான்.

ஒருவேளை அடுத்த இரு போட்டிகளில் இலங்கை அணி வென்றுவிட்டால், நிச்சியமாக அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் இந்திய அணி இப்பொழுது (-0.126) ரன்ரேட்டிலும் , இலங்கை அணி (+0.589) என்ற ரன்ரேட்டிலும் உள்ளனர்.

அதனால் இனிவரும் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்த வாரம் இறுதியில் நடைபெற உள்ள இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாகுமா ? இல்லையா ? என்ன செய்ய போகிறது இந்திய கிரிக்கெட் அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..!

நாளை இரவு 7:30 மணியளவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷனக்க தலைமையிலான இலங்கை அணியும் விளையாட உள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய சூழநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img