ஐபிஎல் :
கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்னர் ரசிகர்கள் வரவேற்பை பெற்றதால் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது ஐபிஎல். இதுவரை 14 ஆண்டுகள் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 15வது ஆண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதிக முறை கோப்பை வென்ற அணிகள் :
இதுவரை 14 சீசன் போட்டிகளில் அதிமகபட்சமாக 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும் கோப்பையை வென்றுள்ளனர். பின்னர் கொல்கத்தா அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு இந்த மூன்று அணிகளும் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இல்லை.
ஐபிஎல் 2022: ஐபிஎல் போட்டிகள் என்று தொடங்கிவிட்டால் ஒரு வீரர்பற்றி புகழ்ந்து பேசுவதும், அவரை பற்றி தவறாக பேசுவது வழக்கம் தான். அதேபோல தான் இந்த ஆண்டு சென்னை அணியின் மோசமான நிலையை பற்றி பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்.

சென்னை அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 14ஆம் ஆண்டு போட்டியில் கோப்பையை வென்ற சென்னை அணி இந்த ஆண்டு புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது தான் உண்மை.
இதனை பற்றி பேசிய ஹர்பஜன் கூறுகையில்; “ரவீந்திர ஜடேஜாவிற்கு பிறகு மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்றது சென்னை அணிக்கு சிறப்பாக தான் இருந்தது. ஒருவேளை தோனி சாப்டாக வழிநடத்த தொடங்கியதில் இருந்து புள்ளிபட்டியலில் டாப் இடத்தில் இடம்பிடித்திருக்க முடியும்.”

“ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் சென்னை அணியின் விக்கெட்டை கைப்பற்றும் தீபக் சஹார் காயம் காரணமாக இந்த ஆண்டு போட்டியில் விளையாடவில்லை. அதுமட்டுமின்றி, பேட்ஸ்மேன்கள் யாரும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை.”
ஆனால் சென்னை அணி சரியாக இருந்திருந்தால் நிச்சியமாக இந்த அணையை வைத்து ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்க முடியும். ஒருவேளை சென்னை அணி அவர்களது ஹாம் இடத்தில் விளையாடிருந்தால் நிச்சயமாக நிலைமை மாறிருக்கும். இதுபோல தான் டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.”

கிரிக்கெட் ரசிகர்களே…! ஹர்பஜன் சொன்னது போல, சென்னை அணி ஒருவேளை ஹாம் (சென்னை மைதானத்தில்) விளையாடிருந்தால் வெற்றி கிடைத்திருக்குமோ ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!
0 Comments