இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் இவங்க இரண்டு பேரை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் ; கடுப்பான ரசிகர்கள் ;

0

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு சாதகமாக இல்லை என்பது தான் உண்மை.

ஆமாம்…. ! சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கான தொடர் போட்டிகள். அதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று பல எதிர்பார்ப்புடன் களமிறங்கிய. ஆனால் அதிலும் தோல்வி தான். 2 – 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி டெஸ்ட் போட்டிக்கான தொடரை கைப்பற்றியது.

அதன்பின்னர் இப்பொழுது ஒருநாள் போட்டிக்கான தொடர் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி அன்று தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. நேற்று நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது தென்னாபிரிக்கா.

அதனால் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது தென்னாபிரிக்கா அணி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடரிலும் தென்னாபிரிக்கா அணி தான் வென்றுள்ளது. நாளை மீதமுள்ள ஒரு ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. அதில் ஆவது இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா ???

ஒருநாள் போட்டியில் தொடர்ந்து இரு போட்டிகளிலும் தோல்விக்கு முக்கியமான காரணமே மிடில் ஆர்டர் தான். ஆமாம்… ! முதல் ஒருநாள் போட்டியில் ரிஷாப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் ரன்களை அடிக்கவே இல்லாததுதான் முதல் போட்டியில் தோல்விக்கு காரணம்.

இரண்டாவது போட்டியில் ரிஷாப் பண்ட் அடித்து தொம்சம் செய்தார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் வழக்கம் போல் சொல்லும் அளவிற்கு ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை. அதனால் தான், மிடில் ஆர்டரில் சரியாக பார்ட்னெர்ஷிப் இல்லாமல் போனது.

இந்த இருவருக்கும் பதிலாக இந்திய அணியில் பல வீரர்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்க அதிக திறமை உள்ளது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற இருவரும் அணியில் தான் உள்ளனர். இவர்கள் இருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சியமாக மிடில் ஆர்டர் வலுவாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

தொடர்ந்து மோசமான நிலையில் பேட்டிங் செய்து வருகின்ற வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை சமுகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here