இப்படி மட்டும் நடந்த நிச்சியமாக IPL போட்டியில் இருந்து Dhoni – யை Ban பண்ணிருவாங்க கண்டிப்பா..!

இப்படி மட்டும் நடந்த நிச்சியமாக IPL போட்டியில் இருந்து Dhoni – யை Ban பண்ணிருவாங்க கண்டிப்பா..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த விதமாக ஐபிஎல் 2021 சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 இரண்டு மாதங்கள் அதாவது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால், விறுவிறுப்பான போட்டிக்கு எந்த பஞ்சமும் இருக்காது.

ஐபிஎல் போட்டியிலேயே அதிகமான வெற்றிகளையும் கைப்பற்றி அணிகளுள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சிஎஸ்கே அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறாமல் போய்விட்டது.

அதற்கு முக்கியமான கரணம் பேட்டிங் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் மோசமான நிலையில் இருந்த சிஎஸ்கே அணி நிச்சியமாக இந்த ஆண்டு காம்பேக் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த படி சிஎஸ்கே அணி சிறப்பான முறையில் விளையாடி வருகின்றனர்.

முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தது. அதில் சிஎஸ்கே அணி 188 ரன்கள் எடுத்தும் பவுலிங் சரியாக இல்லாத காரணத்தால் சிஎஸ்கே அணிக்கு தோல்வி நேர்ந்தது.

அதேபோட்டியில் பவுலிங் செய்யும்போது சிஎஸ்கே அணி கொடுத்த நேரத்தை அதாவது 1 Hr 30 Min விட அதிகமான நேரத்தை சிஎஸ்கே அணி பயன்படுத்தியதால் தோனிக்கு 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது
பிசிசிஐ. அதேபோல இன்னும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் அப்படி தாமதம் ஆனால் நிச்சியமாக கேப்டனான தோனிக்கு சில போட்டிகளில் இருந்து அவரை விலகிவிடுவார்கள்.

இந்த செய்தியை கேட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தோனி இடத்தில் வேறொருவரை வைத்து பார்ப்பது மிகவும் கடினம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். சிஎஸ்கே அணி 2 போட்டியில் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.