இதை சரியாக செய்திருந்தால் வெற்றி பெற்று இருப்போம் ..வருத்தத்தோடு தெரிவித்த தோனி ..முழு விவரம்
மேட்ச் 2: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதினர். முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.
ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளஸிஸ் ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. அதனால் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்கள், டுப்ளஸிஸ் எந்த ரங்களையும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.
ஆனால் அதனபின்னர் பேட்டிங் செய்த மெயின் அலி மற்றும் சுரேஷ் ரெய்னாவின் பார்ட்னெர்ஷிப் மிகவும் அசத்தலாக இருந்தது. பின்னர் பேட்டிங் செய்த ராயுடு, ஜடேஜா மற்றும் சாம் கரனின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்கள் எடுத்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் வேற லெவல் ஆக இருந்துள்ளது. பிரிதிவி ஷா மற்றும் தவான் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர்.
18.4 ஓவர் முடிவில் 190 ரன்களை அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. புள்ளிபட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெட் : -0.779ல் இருப்பதால் இறுதி இடத்தில உள்ளது சிஎஸ்கே அணி.
இதை சரியாக செய்திருந்தால் வெற்றி பெற்று இருப்போம் ..வருத்தத்தோடு தெரிவித்த தோனி ..முழு விவரம்
நேற்று போட்டி முடிந்த பிறகு தோனி அளித்த பேட்டியில் ; இது ஒரு நல்ல ஆரம்பம் தான். நங்கள் அடித்த 188 ரன்கள் மிகவும் நல்ல ரன்கள் தான். அதில் சுரேஷ் ரெய்னா, மெயின் அலி, ஜடேஜா, ராயுடு, சாம் கரண் போன்ற வீரர்கள் அசத்தியுள்ளனர்.
20 ஓவர் போட்டியில் 188 என்பது நல்ல ரன்கள் தான். இருந்தாலும் நங்கள் தவான் மாற்றம் பிரிதிவி ஷா விக்கெட்டை முன்னாடியே கைப்பற்றி இருந்தால் நிச்சியமாக வெற்றி பெற்று இருக்க முடியும். பேட்டிங் சரியாக இருக்கிறது, ஆனால் பவுலிங்கில் சிறிது கவனம் தேவை என்று கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தல தோனி