இவர் குண்ட இருப்பது ஒரு பிரச்சனையா ? இவருடைய திறமை தான் இந்திய அணிக்கு முக்கியம் ; முன்னாள் வீரர் ஆவேசம் ;

0

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், லத்தம் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும் மோதி விளையாடி வருகின்றனர். இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்திய அணியின் முன்னேற்றம் :

சமீபத்தில் நடைபெற்று அனைத்து விதமான ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது இந்திய. அதற்கு முக்கியமான காரணம் திறமையான வீரர்கள் அணியில் இடம்பெற்றதுதான்.

எப்பொழுதுமே ஐசிசி தொடரில் மட்டும் சொதப்பி வரும் இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை நிச்சியமாக உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி :

இந்திய கிரிக்கெட் அணியில் திறமையான பல வீரர்களுக்கு அவ்வப்போது வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தான் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

அதனால் இப்பொழுது விளையாடி வரும் இளம் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவரவர் திறமையை நிரூபித்து கொண்டு வருகின்றனர். ஆனால் உண்மையான விளையாட்டு என்பது டெஸ்ட் போட்டி தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஒரு சில வீரரால் மட்டுமே ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியும். ஆனால் பெரும்பாலான டெஸ்ட் வீரர்கள் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடுவது இல்லை. இருப்பினும் வீரர்களின் திறமைக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இது ஒன்றும் அழகி போட்டி இல்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர்.

மேலும் இதனை பற்றி பேசிய கவாஸ்கர் கூறுகையில் : “சமீப காலமாகவே உள்ளூர் போட்டிகளில் சர்ப்ரஸ் கான் சிறப்பாகவும் அதிரடியாகவும் ரன்களை விளாசி வருகிறார். ஒருவேளை தேர்வாளர்கள் சிலிம் ஆக இருக்கும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால் பேஷன் ஷோ-க்கு தான் போக வேண்டும். எப்பொழுதும் தேர்வு என்பது அவரது உருவத்தை பார்த்து முடிவு செய்ய கூடாது. வீரர்கள் அடிக்கும் ரன்களை வைத்து தான் முடிவு செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார் கவாஸ்கர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here