நான் என்ன செய்வேன் ; இப்படி செய்தலே போதும் வெற்றியை சுலபமாக பெற்று விடலாம் ; கே.எல்.ராகுல் ஓபன் டாக் ;

0

வான்கடே : நேற்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற இந்திய பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

இருந்தாலும் மிச்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஆனால் பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து கொண்டே வந்த ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 188 ரன்களை மட்டுமே அடித்தனர்.

பின்பு 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி வெற்றி காத்திருந்தது. ஆமாம், இஷான் கிஷான், சுப்மன் கில், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற நான்கு வீரர்களும் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இருந்தாலும் ரவீந்திர ஜடேஜா, ஹர்டிக் பாண்டிய, கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்தனர். சரியாக 39.5 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 191 ரன்களை அடித்தனர்.

அதனால் 5 விக்கெட்டை வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வென்ற இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாத கே.எல்.ராகுல் தான் இந்த போட்டியின் ஆட்ட நாயகன்.

ஆமாம், விராட்கோலி, ஹர்டிக் பாண்டிய, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் விக்கெட்டை இழந்தாலும் கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய வீரரான கே.எல்.ராகுல் கூறுகையில் : “ஸ்டார்க் சிறப்பாக பவுலிங் செய்து முதல் விக்கெட்டை கைப்பற்றினார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் குழப்பாக இருக்க கூடாது என்று நினைத்தால்.”

“முதலில் சில பவுண்டரிகள் அடிக்க வேண்டும். நான் சுப்மன் கில், ஹர்டிக் பாண்டிய, ஜடேஜா போன்ற வீரர்களுடன் பேட்டிங் செய்தேன். அதிலும் ஜடேஜா சிறப்பாக விளையாடி ரன்களை விளாசினார். அவர் இப்பொழுது சிறப்பான போர்மில் இருக்கிறார். அதுமட்டுமின்றி, அவரால் என்ன செய்ய முடியும் என்று அவருக்கு நன்கு தெரியும்.”

“முதலில் நாங்க பவுலிங் செய்து கொண்டு இருந்த போது பிட்ச்- பவுலர்களுக்கு சாதகமாக இல்லை. ஆனால் முகமத் ஷமி பவுலிங் செய்ய தொடங்கிய போது சூழ்நிலை மாறியது. எந்த அணியாக இருந்தாலும் வெற்றிபெற வேண்டுமென்றால் மிடில் ஓவரில் விக்கெட்டை கைப்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here