இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பினை முறையில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்து இதுவரை 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கொரோனா தாக்கம் ஐபிஎல் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்ததால், ஐபிஎல் 2021 போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரரான வருண் சக்கரவத்தி வீரர் கொரோனாவால் பாதிக்க பட்டதால் ஒரு போட்டியை மட்டும் நிறுத்த முடிவு செய்தனர். ஆனால் அதன்பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனால் அனைத்து அணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் விக்கெட் கீப்பர் சகாவுக்கும் கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீடியோ காலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இடையே ஒரு மீட்டிங் நடந்தது. அதில் எப்படி , யார் யார் எப்பொழுது வீட்டுக்கு போக வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விளக்கத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அளித்துள்ளது.
அதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, முதல் வெளிநாட்டு வீரர்களை பத்திரமாக அவரவர் வீட்டுக்கு அனுப்புங்கள், அதன்பிறகு இந்திய வீரர்களை அனுப்புங்கள். எல்ல வீர்ரகளும் அவரவர் வீட்டுக்கு பத்திரமாக சென்ற பிறகு, இறுதியில் நான் வீட்டுக்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார் தோனி.
மீதமுள்ள 31 போட்டி செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஆனால் அந்த போட்டிகள் இந்தியாவ அல்லது ஐக்கிய அரபு நாடா ? என்பது கேள்விக்குறிதான். ஐபிஎல் பாதுகாப்பான வளையத்துக்குள் எப்படி கொரோனா நுழைந்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளது.