ஐசிசி உலககோப்பை டி20 2021 போட்டிகள் சிறப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் ஓமன் நாட்டிலும் நடைபெற்று வருகிறது. இதுவரை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி தான் 2007ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 உலககோப்பையை வென்றுள்ளது. அதன்பிறகு இப்பொழுது வரை கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது இந்திய.
இன்றைய 28வது போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளனர். இதுவரை இந்த இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியில் அதிக முறை நியூஸிலாந்து அணி தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது…!!
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு இன்றைய போட்டி மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிப்பட்டியளில் முதல் இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை கைப்பற்ற முடியும். அப்பொழுது தான், அரை இறுதிக்குள் நுழைய முடியும்.
அதனால் இன்றைய போட்டி நிச்சியமாக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை…!! ஆனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11 யார் யார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!!! ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நேரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்த வருகின்றனர்.
அதேபோல தான் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிரெட் லீ சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்… !!!! அதில் ‘ சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கிரிக்கெட் விளையாட்டில் பல அனுபவம் உள்ளது.
அதுமட்டுமின்றி, நான் அஸ்வினுடைய மிகப்பெரிய ரசிகன். ஏனென்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து போட்டிகளிலும் விளையாடும் திறன் உள்ளது… ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க படுவதில்லை. அது அவர்களது அணியின் முடிவு. ஆனால் இந்திய அணியின் கேப்டன் அவரை பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரெட் லீ….!!
பிரெட் லீ சொல்வது போல், இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியமால் இந்திய அணி மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. அதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்தால் நிச்சியமாக விக்கெட்டை கைப்பற்றிவார் என்று எதிர்பார்க்க படுகிறது..
இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற வேண்டுமா ?? இல்லையா ?? என்பதை மறக்காமல் உங்கள் கருத்தை Comments பண்ணுங்க… !!