இந்த விஷயம் எங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது , அதனால் மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் டி-20 போட்டிகள் ஆரம்பித்து சிபிரான முறையில் நடைபெற்று வருகிறது, அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று நடந்த போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 171 ரன்களை எடுத்துள்ளார்.
அதில் வார்னர் 57 ரன்கள், பரிஸ்டோவ் 7 ரன்கள், மனிஷ் பாண்டே 61 ரன்கள், வில்லியம்சன் 26 ரன்கள், கெதர் ஜாதவ் 12 ரன்களை எடுத்துள்ளார். பின்பு 172 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 18.3 ஓவரில் 173 ரன்களை விளாசி வெற்றியை கைப்பற்றியது சிஎஸ்கே.
அதில் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளஸிஸ் ஆகிய இருவரும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்துள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்தில் 75 ரன்கள், டுப்ளஸிஸ் 38 பந்தில் 56 ரன்கள், மொயின் அலி 15 ரன்கள், ஜடேஜா 7 ரன்கள் மற்றும் சுரேஷ் ரெய்னா 17 ரன்களை விளாசியுள்ளனர்.
அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இப்பொழுது சிஎஸ்கே அணி 10 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில உள்ளது சிஎஸ்கே அணி. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அளித்த பேட்டியில் ; சிஎஸ்கே அணியில் சிறப்பான முரையில் பேட்டிங் அமைத்துள்ளது. அதனால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. பேட்டிங் நல்ல இருக்கு என்று சொன்னதால் , பவுலிங் மோசம் என்று அர்த்தமில்லை.
கடந்த ஆண்டு விட , இந்த ஆண்டு எங்களுக்கு பேட்டிங் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. எப்பொழுது 7 , 8 மாதம் கழித்து மீண்டும் ஐபிஎல் போட்டி என்று வரும்போது, எங்கள் அணியில் 11 பேர் சிறப்பான முறையில் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் தோனி.