இவங்க மூன்று பேர் சரியாகவே விளையாடவே இல்லை ; வருத்தமாக இருக்கிறது ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்துள்ளது டி-20 உலகக்கோப்பை போட்டிகள். அதில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளனர்.

மோசமான நிலையில் வெளியேறிய இந்திய :

எப்பொழுது அனைத்து நாடுகளும் பங்கேற்கும் போட்டியான ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் இந்திய அணியின் விளையாடி சமீப காலமாகவே மோசமான நிலையில் இருந்து வருகின்றன. ஆனால் மற்ற அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் மட்டும் இந்திய அணி அடித்து தொம்சம் செய்யும்.

ஆமாம், உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிக்கான தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வென்றது இந்திய. ஆனால்

உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி சுற்றில் மிகவும் மோசமான நிலையில் வெளியேறியது இந்திய என்பது தான் உண்மை. அதுவும் இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றதா நிலையில் வெளியேறியது ரசிகர்களிடேயே கோபத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மாவால் இந்திய அணியை வழிநடத்தி உலகக்கோப்பையை வெல்ல முடியாத நிலையில் தான் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, தோல்விக்கு ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலின் பட்டிமகி பார்ட்னெர்ஷிப் மற்றும் ஷமி, புவனேஸ்வர் குமார் பவுலிங் தான் முக்கியமான காரணம் என்றும் அவரவர் கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமன்றி, இன்னும் சில தினங்களில் சர்வதேச டி-20 போட்டிக்கான கேப்டனாக ஹர்டிக் பாண்டியவை அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி ஹர்டிக் பாண்டிய பிசிசியிடன் சில மன வருத்தத்தை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் விளையாடும் டாப் ஆர்டர் வீரர்களின் அணுகுமுறை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும் சரிதான், ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக திகழ்கிறார் ரோஹித் சர்மா. அதனால் இந்திய கிரிக்கெட் அணியையும் சிறப்பாக வழிநடத்துவார் என்று பலர் ஆசை கனவோடு இருந்தனர். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. எப்பொழுது ஐபிஎல் போட்டியையும் சர்வதேச போட்டியையும் ஒப்பிட்டு பேசவே முடியாது என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம்.

உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் சூப்பர் 4 தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் யாருக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here