Advertisement
HomeTrending Newsஇதுதான் நான்..! இப்படி தான் விளையாடுவேன் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ; முழு...

இதுதான் நான்..! இப்படி தான் விளையாடுவேன் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி இதுவரை 33 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் நேற்று இரவு 7:30 மணியளவில் நடைபெற்ற போட்டியில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின.

இந்திய அணிக்கு நிச்சியமாக வெற்றி பெற வேண்டிய போட்டி தான் இது. இதில் டாஸ்-யில் தோல்வி பெற்றார் விராட்கோலி. ஹா ஹா… டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியா இது ??

என்ற அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் யார் யார் எல்லாம் அடிக்கமாட்டார்கள் என்று நினைத்து கொண்டு இருந்த வீரர்கள் தான் அடுத்து தொம்சம் செய்துள்ளனர். இந்த முறை இந்திய அணிக்கு சிறப்பாக தொடக்க ஆட்டம் அமைந்தது தான் உண்மை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 210 ரன்களை விளாசினர். அதில் கே.எல்.ராகுல் 69, ரோஹித் சர்மா 74, ரிஷாப் பண்ட் 27, ஹார்டிக் பாண்டிய 35 ரன்களை குவித்துள்ளார். பின்னர் 211 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி.

ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. இந்திய அணிக்கு அமைந்த பார்ட்னெர்ஷிப் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு அமையவில்லை. அதனால் தான் தோல்வியே, இறுதி ஓவர் வரை போராடி 7 விக்கெட் இழந்து 144 ரன்களை அடித்துள்ளனர். அதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

இந்த போட்டியில் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை ரோஹித் சர்மா பெற்றார். அப்பொழுது பேசிய ரோஹித் சர்மா ; கடந்த இரு போட்களில் அமையாத ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் மற்றும் தொடக்க ஆட்டம் என்பது சிறப்பாக அமைந்தது. கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை விளையாடினார்.

கே.எல்.ராகுல் மற்றும் எனக்கும் சிறந்த பார்ட்னெர்ஷிப் அமைந்தது. ஆனால் நாங்களும் முதலில் பவுலிங்கை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. சிறப்பாக விளையாடி நல்ல ரன் ரேட் வைக்க வேண்டும் என்று தான் நினைத்தோம்.

ஆனால் இது என்னுடைய விளையாட்டு இல்லை…! ஏனென்றால் நான் எப்பொழுதும் சில நேரங்கள் எடுத்து முதலில் போட்டியில் நின்று அடிக்க வேண்டும் என்று தான் நான் நினைப்பேன். அப்பொழுது தான் இன்னும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா…!

கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டனர்…! உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTSல் பதிவு செய்யுங்கள்…!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular