சிஎஸ்கே அணியின் கேப்டன் நான் தான் ; வெளிப்படையாக பேசிய ஆல்-ரவுண்டர் ; உற்சாகத்தில் இருக்கும் சென்னை ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

0

ஐபிஎல் 2022 போட்டி நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சுவார்த்தை சுடுபிடிக்க தொடங்கியுள்ளது.

ஆமாம், அதுமட்டுமின்றி ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகள் (லக்னோ மற்றும் அகமதாபாத்) போன்ற அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது.

பின்னர் புதிய இரு அணிகளும் அதிகபட்சமாக மூன்று வீரர்கள். அதிலும் ஒரு வெளிநாட்டு வீரர் மற்றும் இரு இந்திய வீரர் என்ற அடிப்படையில் தான் வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை வைத்துள்ளது பிசிசிஐ. சமீபத்தில் தான் பழைய 8 அணிகளும் தக்கவைத்து வீரர்கள் பட்டியலை அறிவித்தது பிசிசிஐ.

இதுவரை 14 சீசன் ஐபிஎல் டி20 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் ஆரம்பித்த முதல் ஆண்டு முதல் இப்பொழுது வரை மகேந்திர சிங் தோனி தான் தலைமை தாங்கி வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அதன்பிறகு எப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆமாம் , 40வயதான தோனி எவ்வளவு ஆண்டுகள் இன்னும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று கேள்வியும் எழுகிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே.

இருந்தாலும் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி, சில ஆண்டுகள் விராட்கோலியை வழிநடத்தி வந்துள்ளார் தோனி. அதன்பின்னர் தான் ஓய்வை அறிவித்தார். அதேபோல, தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி மற்ற வீரர்களை வழிநடத்தி அதன்பிறகு தான ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ட்விட்டரில் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பக்கத்தில் அடுத்த சிஎஸ்கே கேப்டன் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதனை பார்த்த ரவீந்திர ஜடேஜா, வேற யாரு 8 தான் என்று கூறினார். பின்னர் சிஎஸ்கே ரசிகர்கள் அதனை பற்றி பேச தொடங்கிய போது அந்த பதிவை delete செய்தார் ஜடேஜா. 8 நம்பர் என்பது ரவீந்திர ஜடேஜாவின் ஜெர்சி நம்பர்.

ஆமாம், அதுவும் சரி தான். ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவமும் அவரிடம் உள்ளது. அதனால் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வழிநடத்த போவது ஜடேஜாவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here