விராட்கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை ; ஆனால் நான் இவங்க இருவருக்கும் வாய்ப்பு கொடுப்பேன் ; ரோஹித் சர்மா ஓபன் டாக்

0

இன்று மதியம் 1:30 மணியளவில் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று முதல் நடைபெற உள்ளது.

சமீபத்தில் தான் அதற்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் இளம் வீரரான ரவி பிஷோனிக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அணியை அறிவித்த பிறகு அனைத்து வீரர்களும் ஓர் இடத்தில் கூடி கொரோனா பரிசோதனை செய்த பிறகு தான் பயிற்சிகளை தொடங்க வேண்டும். அது தான் வழக்கமும் கூட… !

அப்படி கொரோனா பரிசோதனை செய்த போது ருதுராஜ் கெய்கவாட், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிகர் தவான் போன்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆமாம்..! அதனால் மயங்க் அகர்வால் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஷாருகான் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தோனி இந்திய அணியில் இருந்த காலத்தில் குல்தீப் மற்றும் யுஸ்வேந்திர சஹாலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் தோனி ஓய்வுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஒரு போட்டியில் கூட ஒன்றாக விளையாடியதும் இல்லை, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் தான் இருந்தன.

நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார் யுஸ்வேந்திர சஹால். சமீபத்தில் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்த போது யுஸ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் ஆகிய இருவரும் ஒரே போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதா என்று..!

அதற்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ; ஆமாம்…! குல்தீப் யஷ்வ மற்றும் சஹால் ஆகிய இருவரின் விளையாடும் இந்திய அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் மாற்றம் இல்லை, இப்பொழுது சில மாற்றங்கள் வேண்டும் என்பதால் அவர்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் இருவருக்கும் வாய்ப்புகளை கொடுப்பதை பற்றி நான் யோசித்து கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

அதுமட்டுமின்றி, இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் ரொம்ப நாட்களாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதனால் அவருக்கு சில நேரங்கள் ஆகும், மீண்டும் முன்பு போல் பவுலிங் செய்ய. அதனால் அவரை பார்த்துக்கொண்டே தான் வருகிறோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா. விராட்கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக முதல் ஒருநாள் போட்டியில் இன்று விளையாட உள்ளார் ரோஹித் சர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here