விராட் கோலி மற்றும் முன்னாள் இந்திய கேப்டனான தோனியின் விக்கெட்டை எடுத்ததில் மிகவும் சந்தோசமாக இருக்கிறது ; இளம் வீரர் கூறியுள்ளார் … யாராக இருக்கும் ??

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி மற்றும் அதிரடி வீரரான விராட் கோலி விக்கெட் எடுத்ததில் மிகவும் சந்தோசம் எனக்கு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டியில் டோனியின் விக்கெட்டை எடுத்துள்ளேன். அதுமட்டுமின்றி ஒருநாள், டெஸ்ட் மாற்றும் டி-20 போன்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடும் விராட் கோலியையம் அவுட் செய்துள்ளேன், ஏனென்றால் அவர்களை அவ்வளவு சுலபமாக பெவிலியன்-க்கு அனுப்ப முடியாது.

இந்திய அணியின் இன்னும் தேர்வாகவில்லை. ஆனாலும் இவர்கள் இருவரின் விக்கெட்டை கைப்பற்றி அவரது கனவை நினைவாகியுள்ளார் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான். ஐபிஎல் இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே மற்றும் டி.சி ஆகிய இரு அணிகளும் மோதின.

அதில் தோனியை இரண்டாவது பந்தில் ஆட்டம் இழக்க செய்தார் அவேஷ் கான். அந்த போட்டியில் 23 ரன்களை கொடுத்த அவேஷ் கான் 2விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதே நேரத்தில் 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

அடுத்தது 22 வது போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. அதில் 12 ரன்களை எடுத்த நிலையில் விராட் கோழியின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் அவேஷ் கான்.

சமீபத்தில் ஒரு பத்திரிகையின் பேட்டியில்; விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரும் மிகவும் பெரிய லெஜெண்ட் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன்பிறகு, நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு விராட் கோலியிடன் நான் பேசினேன்.

அப்பொழுது நீ சிறப்பாக பவுலிங் செய்தாய் என்று விராட் கோலி என்னிடம் கூறினார், என்று இளம் வீரரான அவேஷ் கான் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வருகின்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் விளையாட இந்திய அணியில் அவேஷ் கானுக்கு இடம் கிடைத்துள்ளது.

ஐபிஎல் 2021, இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 14 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் அவேஷ் கான். அதனால் அதிக விக்கெட் எடுக்கும் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.