இந்திய அணியில் இடம் கிடைத்தது எனக்கு சந்தோசமாக உள்ளது..! எனக்கு இவர் தான் அதிக நம்பிக்கை கொடுத்தார் ; ரவி பிஷோனி ஓபன் டாக் :

0

வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகள். ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த முறை ஆவது இந்திய அணி தொடரை கைப்பற்றுமா ? இல்லையா ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

நேற்று தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட போகும் 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் 21 வயதான ரவி பிஷோனி புதிதாக இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் இடம்பெற்றதை பற்றி நெகிழ்ச்சியுடன் பேசிய ரவி ;

நான் அனில் கும்ப்ளே சாரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுள்ளேன். அவர் சொல்லிக்கொடுத்த பல விஷயங்களை கற்று கொண்டதால் தான் நான் இந்த நிலைமையில் உள்ளேன். நான் எவ்வளவு அழுத்தத்தில் இருந்தாலும், அதனை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்துள்ளார்.

அவர் எப்பொழுதும் என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு விளையாட சொல்லுவார். அதுமட்டுமின்றி, என்னுடைய இஷ்டத்திற்கு ஏற்ப விளையாட சொல்லுவார் அனில் கும்ப்ளே என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார் ரவி பிஷோனி. அதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார் அனில் கும்ப்ளே. இதுவரை 14 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்த நிலையில் ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார் ரவி பிஷோனி. ஆனால் ப்ளேயிங் 11ல் இடம் கிடைக்குமா ? கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் 21 வயதான ரவி பிஷோனிக்கு வாய்ப்பு வழங்குவார்களா ?

வெஸ்ட் இண்டீஸ் அணியிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் விவரம் : கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தீபக் சஹார், ஷர்டுல் தாகூர், யுஸ்வேந்திர சஹால்,குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷோனி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா மற்றும் அவேஷ் கான்.

டி-20 போட்டிக்கான இந்திய அணியின் விவரம் இதோ ; ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல்) துணை கேப்டன், இஷான் கிஷான், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், ஷர்டுல் தாகூர், ரவி பிஷோனி, அக்சர் பட்டேல், அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான் மற்றும் ஹர்ஷல் பட்டேல்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here