ஐபிஎல் போட்டிகளில் விராட்கோலி எனக்காக இதை செய்ய வேண்டும் ; டூப்ளஸிஸ் வேண்டுகோள் ; முழு விவரம் இதோ ;

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு வருகின்றனர். இதுவரை 14 ஐபிஎல் சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 8 அணிகளை கொண்டு தான் விளையாடி வந்தனர். ஆனால் இந்த முறை இரு புதிய அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதில் லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு அணிகள் புதிதாக களமிறங்கியுள்ளது.

அதனால் இந்த முறை மெகா ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் எதிர்பாராத விஷயங்கள் பல நடந்துள்ளது தான் உண்மை. நடப்பு சாம்பியன் படத்தை வென்ற அணி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதில் வெற்றியின் முக்கியமான காரணம் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் என்று கூட சொல்லலாம்.

ஏனென்றால், ருதுராஜ் மற்றும் டூப்ளஸிஸ் ஆகிய இருவரும் இணைந்து தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் , மகேந்திர சிங் தோனி, மொயின் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களை மட்டுமே தக்கவைத்தனர்.

அதில் டூப்ளஸிஸ் இடம்பெறாதது சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் எப்படியாவது ஏலத்தில் டூப்ளஸிஸ் மீண்டும் சென்னை அணியில் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் கையில் எடுக்க போவதாக சென்னை அணி கூறியது. ஆனால் எதிர்பாராத விதமாக டூப்ளஸிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதில் டூப்ளஸிஸ் ஐ-கேப்டனாக அறிவித்துள்ளது பெங்களூர் அணி. ஏனென்றால் கடந்த ஆண்டு இறுதியில் நான் இனிமேல் எந்த டி-20 போட்டிக்கான போட்டிகளிலும் கேப்டனாக இருக்க போவதில்லை என்று விராட்கோலி கூறிய காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளது பெங்களூர் அணி.

புதிய கேப்டனாக டூப்ளஸிஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; நான் பெங்களூர் அணியில் விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக தான் உள்ளது. அதுமட்டுமின்றி, நான் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடுவது புதிது. அதுமட்டுமின்றி, விராட்கோலி பெங்களூர் அணியில் பல ஆண்டுகளாகவே விளையாடி வருகிறார்.

அதனால் விராட்கோலி எனக்கு நிச்சியமாக பெங்களூர் அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்று எனக்கு வழிநடத்துவார். அவர் (விராட்கோலி) பெங்களூர் அணியில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ். இந்த முறை டூப்ளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணி இறுதி போட்டி வரை முன்னேறுமா ??

இதுவரை மொத்தம் 14 ஆண்டுகள் வெற்றிகரமாக ஐபிஎல் டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இதுவரை ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் படத்தை வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.