ஐபிஎல் 2021: கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. ஆனால் தீடிரென்று சில வீரர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் உடனடியாக ஐபிஎல் 2021 தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
ஐபிஎல் ஏன் தற்காலிகமாக நிறுத்தியது பிசிசிஐ ?
மே 4ஆம் தேதி அன்று நடக்க வேண்டிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருக்கும் சில வீரர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு அனைத்து அணிகளில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று பேருக்கும், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் தலா இருப்பது உறுதியான நிலையில் உடனடியாக மீதமுள்ள போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்தது பிசிசிஐ.
இதற்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்னா ஜோஸ் பட்லர் அவருக்கு பிடித்த கேப்டன் பற்றி சில தகவலை பகிந்துள்ளார். அதில் பேசிய அவர்; சஞ்சு சாம்சன் கேப்டனாக இருக்கும் அணியில் நான் விளையாடுவது எனக்கு மிகவும் சந்தோசமாக தான் இருக்கிறது.
நான் அவரிடம் இருந்து பல நல்ல விசியங்களை கற்று கொண்டு தான் இருக்கிறேன். எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் எப்பொழுதும் ஒரே மாதிரியாக தன இருப்பார். அதுதான் ஒரு கேப்டனுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்று சஞ்சு சாம்சனை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் ஜோஸ் பட்லர்.
ஐபிஎல் 2021யில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றியை கைப்பற்றி புள்ளிபட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதிலும் கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடிய 7 போட்டிகளில் 277 ரன்களை விளாசியுள்ளார். அதில் அதிகபட்சமாக 119 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.