இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இதுவரை 17 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியளின் முதல் இடத்தில் பெங்களூர் அணியும் ,இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான சுழல்நிலையில் இருந்தது. அதற்கு எதிர்மாறாக இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 4 போட்டியில் விளையாடிய அதில் மூன்று போட்டிகளில் வெற்றியை கைப்பற்றியது. அதனால் இப்பொழுது புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே.
கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இம்ரான் தாகிர் இடம்பெறவில்லை என்ற பல கேள்விகள் எழுந்தது. அதற்கு எந்த பதிலும் சரியாக சென்னை அணியில் இருந்து வரவில்லை. சமீபத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் ஒருவர் நீங்கள் ஏன் சிஎஸ்கே அணியில் விளையாடவில்லை… எப்போதுதான் விளையாடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இம்ரான் தாகிர் ; ரொம்ப நன்றி இந்த கேள்விக்கு , இப்பொழுது இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதனால் இப்பொழுது என்னுடைய ஆட்டம் தேவை இல்லை. இதில் நான் என்பதை விட , என்னுடைய அணி தான் எனக்கு முக்கியம். இந்த மாதிரியான ஒரு அணியில் இருப்பதால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. என்னுடைய நேரம் வரும்போது நிச்சியமாக அதனை சிறப்பாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.